என் இதயத்தில் காட்டிவிட்டு செல்லடி 555

என்னவளே...

நான் இதுவரை ஓவியம்
தீட்டியதில்லை உனக்கும் தெரியும்...

எதோ முயற்சித்தேன்
உன்னை வரைந்துவிட...

என் ஓவியத்திற்கு
தொடக்கமும் தெரியவில்லை...

ஓவியத்திற்கு
முடிவும் தெரியவில்லை...

எந்த ஓவியனின் கைகளையும்
நம்பி இருக்க நான் விரும்பவில்லை...

நீயும் விரும்பமாட்டாய்
எப்போதும்...

உன் மனதின் எண்ணம்
எனக்கு தெரியுமடி...

என் உள்ளம்
உனக்கு புரியாதா...

என் உணர்வுகளை வண்ணம்கொண்டு
தீட்ட முயற்சித்தேன்...

எந்த வண்ணம் கொண்டு
உன்னை தீட்டுவது...

உன் விரல் தொட்டு
காட்டிவிட்டு செல்லடி...

என் இதயத்தில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Jun-16, 7:49 pm)
பார்வை : 237

மேலே