யாரை தேடுகிறேன்

முடிவற்ற கனவுகளில் தொலைந்துபோகவே
தொலையும் இடம் தேடுகிறேன்.
விடைகள் தேடியே
வினாக்கள் தொலைந்தது.
உன்னை மட்டுமே நிரப்பிய இதயமதில்
போதை நிரப்ப நிரப்ப, வெற்றிடமே.
யாரும் செல்லா பாதையதில்
யாரை தேடுகிறேன்? இன்னொரு என்னையோ?

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (19-Dec-17, 9:12 pm)
சேர்த்தது : நிரலன்
Tanglish : yarai thedukiren
பார்வை : 1894

மேலே