எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழுக்கு என ஒரு stackexchange இணையத்தை தொடங்குமாறு stackexchange இணையத்திற்கு எடுத்துரைத்துள்ளேன். 50 பேர்களுக்கும் மேல் பின்தொடர்ந்தும், 40க்கும் மேற்பட்ட கேள்விக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றால் மட்டுமே தமிழுக்கு என ஒரு stackexchange இணையத்தை தொடங்குவார்கள். இந்த இணையத்தின் மூலம், நாம் அணைத்து தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்ட முடியும். நாம், நமது நண்பர்கள் தமிழுக்காக செய்துவரும் அனைத்தையும் உலகின் பார்வைக்கு கொண்டுவரமுடியும். கீழ் உள்ள இணைப்பில் சென்று உங்களது ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


tamil.stackexchange.com

மேலும்

என்னுடைய முதல் கதையான "போட்னோ "-வை https://www.youngwriterssociety.com என்ற இணையதளத்தில் பதவு செய்தேன். ஆங்கில இணையதளமான அதிலும் சில தமிழ் வாசகர்கள் படித்து கருத்து தெரிவித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. என்னை முதலில் ஊக்கப்படுத்திய http://eluthu.com நண்பர்களுக்கு என் முதல் நன்றி! 


கதை: https://www.youngwriterssociety.com/work.php?id=124556

மேலும்

எனது வலைதளங்கள் அனைத்தையும் creative common license-ன் கீழ் மாற்றியுள்ளேன்.

http://niralan-kirukalgal.blogspot.in/
http://niralan-sirukathaigal.blogspot.in/
http://niralan-kuviyangal.blogspot.in/
https://naan-enapadupavan-yaar.quora.com/

எனது கவிதைகள், கதைகள், பதிவுகள் அனைத்தையும் வியாபார நோக்கமின்றி பகிரலாம், மறுபதிவு செய்யலாம்.

மேலும், எனது அனைத்து வலைதளங்களின் பதிவுகளும், கீழ் இருக்கும் ஆன்ட்ராய்டு செயலி-யில் பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.mathi.niralanblogs

மேலும்

சில நேரங்களில் நாம் ஒரு சாதாரண விஷயத்தைக்கூட தலையில் வைத்துக்கொண்டாடுவோம். 'மங்கள்யான்' மிக சிறந்த சாதனை (மீடியாக்களுக்கு மிக சிறந்த தீனி). இந்திய விஞ்ஞானிகளுக்கு இது ஒரு பொன் மகுடம்.

ஆனால், உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன், 'இதனால் நாம் அடையும் பயன் தான் என்ன?'

இந்த கேள்விக்கு என் நன்பர்களின் பதில், 'இந்திய மட்டைப்பந்து(கிரிக்கெட்) அணி வெற்றிப்பெற்றால் கொண்டாடுகின்றாய். இது போன்ற சாதனை நமக்கு பெறுமையல்லவா?', 'ஒரு திரைப்படம் எடுக்க 100 கோடி பயன்படுத்தும் பொழுது. ஏன் இந்த சாதனையை கொண்டாடக்கூடாது?', 'பல நாடுகளுக்கு நாம் இனி செயற்க்கைக்கோள்கள் செய்து தரலாம். இதனால் இந்தியாவிற்கு நிறைய (...)

மேலும்

காந்த ஆராய்ச்சி, மின்சாரம், பெட்ரோல் எல்லாம் ஒரே முறைதான் கண்டுபிடிக்கப்பட்டது, பின்பு பயன்பட ஆரம்பித்தது. ஆனால், செவ்வாய் கிரக ஆராய்ச்சி? ஏற்கனவே சில நாடுகள் இந்த ஆராய்ச்சியில் இருக்கும் பொழுது, இதே ஆராய்ச்சியை தான் நாமும் செய்யவேண்டுமா? ஆராய வேறு கிரகமே இல்லையா? அப்பட்டமாக அமெரிக்காவை இதிலும் 'காப்பி' அடிக்கவேண்டுமா? 'இருக்கிற ஊரிலே இருந்து உழைக்க சொல்லுங்கள்' - ஊர்லையே இருந்து உழைக்க நீங்க சொல்லலாம், நானும் சொல்லலாம். அரசாங்கமும் அதையே தான் சொல்லனுமா? இன்னும் என்னுடைய இந்த கேள்விகளுக்கு தான் இன்னமும் பதில் இல்லை, "இந்தியா ஒரு விவசாய நாடு தானே? 2012-இல் தான் விவசாய பயனுக்காக செயற்க்கைகோள் அனுபப்பட்டது. ஏன் அதுவரை அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை? இவ்வளவு பெரிய விவசாய நாட்டிற்கு, ஒரே ஒரு செயற்க்கோள். சுனாமி அபாயத்தை தெரிந்துக்கொள்ள செயற்க்கைகோள் அனுப்பபட்டதா? இந்திய பாதுகாப்பு துறைக்கு எத்தனை சொர்ப்ப செயற்க்கைகோள் மட்டும் இருக்கின்றனவோ? நினைத்தாலே பயமாக இருக்கிறது! குறைந்த செலவில் இவ்வளவு பெரிய சாதனை செய்ய முடிந்த விஞ்ஞானிகளை ஏன் மக்களுக்கு பயன் படும் ஒரு சாதனையை செய்ய வாய்ப்பு கொடுக்கபடவில்லை? மூன்றாவது பதிலை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அந்த வருமானமெல்லாம் இந்தியர்களுக்கு தான் பயன்படப்போகிறதா?" 05-Oct-2014 12:37 pm
எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ? அறிவியல் என்பது காலம் கடந்து சிந்திப்பது .செவ்வாய் கிரகத்தில் உயிர் இருந்ததா , இருக்கிறதா , இருக்க முடியுமா என்ற கேள்விகள் நம் அறிவியலை வளர்க்கும் . அங்கு நாம் தேடும் உயிர் , நம் மனித / விலங்கு வடிவங்களில் இருக்கலாம் . இல்லாமலும் இருக்கலாம் ... அங்கிருக்கும் உலோகங்கள் , காற்று , திரவம் , மணல் ... அவை எல்லாம் நம் பூமியின் இருக்கும் உலோகங்கள் , காற்று , திரவம் , மணல் மாதிரி இருக்காது . வேறு விதங்களில் / வேறு குணங்களில் இருக்கும் . அது நம் வாழ்வாதரத்துக்கு மேலும் பயன் படலாம் . நீங்கள் பயன்படுத்தும் ரேடியோ , தொலைக்காட்சி எல்லாம் காற்றின் கதிர்களை நம்பிதான் ஆரம்பிக்கப்பட்டது . இப்பத்தான் கேட்டார்கள் . இந்த காற்றின் ஆராய்ச்சிக்கு என்ன பின் என்று ? காந்த ஆராய்ச்சியின் பொது இப்படிதான் கேட்டார்கள் ? பிறகு மின்சாரம் வந்தது ? பூமியை கொஞ்சம் ஆழமாக குடைந்த போதும் இப்படிதான் கேட்டார்கள் . பெட்ரோல் , டீசல் வந்தது . பூமி சுற்றி வர ராக்கெட் விட்டபோதும் இப்படிதான் கேட்டார்கள் . இன்று நீங்கள் பார்க்கும் டிவி ,இன்டர்நெட் ...வானிலை அறிவுப்புகள் , செய்திகள் , தற்காப்புகள் , மருத்துவ தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் அவற்றை நம்பிதான் இருக்கின்றன. நம் அண்டவெளியில் ஏறக்குறைய ஆயிரக் கணக்கான உலகங்களில் உயிர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது ( இருக்கிற மொத்த உலகங்களில் .0001 % உள்ள உலகங்களில் உயிர் இருக்கும் என நாம் நினைத்தால் இந்த பதில் வரும் )... அவை எல்லாவற்றயும் ஆய்வது நம் கடமை . அது நம் இனத்தை வளர்க்கும் . அழிவுகள் இருந்து காக்கும் .அழிவு வருவதை உணர்த்தும் . 'ஊருக்கு போக பணமில்ல, ஒரு பத்து ரூபா குடுங்க' - என்கிற மக்கள் கூட்டம்??? பத்து ருபாய் இல்லாதவன் எதுக்கு ஊருக்கு போக வேண்டும் . இருக்கிற ஊரிலே இருந்து உழைக்க சொல்லுங்கள் . . 02-Oct-2014 8:09 am
இங்கு அனைத்திற்கும் எதிர் பதம் உண்டு... நம்மை போல பலர் உண்டு. கருத்தில் விலகாமல் நின்றால் இணையலாம் சாதனை நோக்கிய பயணத்தில் விழிப்போடு..... பலர் விழிப்போடு உள்ளனர் பறிப்பதில் .... கொடுக்க தான் இங்கு விழிப்போடு இல்லை யாரும்.... செய்கை முறையில் வருகிறேன் வருவோம் 02-Oct-2014 1:49 am
கருத்தை ஏற்றுக்கொள்ள ஆளில்லை நண்பா. வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது. :( இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ, நம் மக்கள் விழித்துக்கொள்ள? 02-Oct-2014 1:41 am

மேலே