மோ+தகம்---மோதகம். மோதகம் (கொலுக்கட்டை) மோ என்பது முன்னிலை அசைச்சொல். தகம் என்பது உஷ்ணம், சூடு என்ற பொருளைத் தருகிறது. அதாவது சூட்டில் ஆவியில் வேகவைப்பது கொலுக்கட்டை. 04-Oct-2017 8:49 pm
ஆட்சியாளர்கள், பெற்றோர்களுக்கே குறைந்துவிட்டதே!
மாணவர்களுக்குக் குறையாமல் இருக்குமா?
ஆனால், மொத்தத்தில் குறைந்தாலும், நேசிப்பவர்கள் நேசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
29-Nov-2017 4:30 am
கலாச்சாரத்திற்குரிய தமிழாக்கம் தான் பண்பாடு ஆகும். நாகரிகம் என்பது அறம், பொருள், இன்பம்கண் உடையது. நஞ்சும் உண்பர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் எனும் புறநானூற்று அடியிலுள்ள நாகரிகம் என்பது நட்பின் ஆழத்திற்கும், நம்பிக்கைக்கும் சொல்வது. நாகரிகம் என்பது கால்த்திற்கேற்ப மாறக்கூடியது. பண்பாடு என்பது மாறாதது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது பண்பாடு. பாடறிந்து ஒழுகுதலாகும். நாகரிகம் என்பது கொள்கையைப் போல மாற்றத்திற்குரியது. பண்பாடு என்பது கோட்பாடுபோல மாறாதது. 26-Oct-2016 11:07 pm
கலாச்சாரம் என்ற மணிப்பிரவாள சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல்
பண்பாடு . நிலத்தை பண்படுத்துதல் போன்று மனிதனை
மனித மனத்தினை பண்படுத்தும் வளப் படுத்தும் காரணப் பெயராக
உருவாக்கப் பட்டிருக்கலாம் .
நஞ்சும் உண்பர் நயத்தக்க நாகரீகர் என்று பழைய தமிழ் வரியுண்டு.
மேம்பட்ட மனித இயல்பை குறிக்கும் சொல். இதுவும் மணிப்பிரவாளச்
சொல் என்று கருதுகிறேன்
மணிப்பிரவாளம் தற்சம தற்பவ விதிகளுக்குட்பட்டு தமிழில்
கலந்த வடமொழிச் சொற்கள் .வைணவ இலக்கியங்களில் இவைகள்
மிகுந்து காணப்படும். அன்றாட வாழ்க்கையிலும் இவைகள் நிரம்பப்
பயன்பாட்டில் உள்ளன .
சிறப்பான கேள்வி
அன்புடன்,கவின் சாரலன் 26-Oct-2016 9:43 am
சென்ற வாரம் கவிஞர் எழில்வேந்தன் அவர்களின் “மங்கையராகப் பிறப்பதற்கு” எனும் கவிதை படித்தேன். அது 2002 இல் தாமரையிலும் ஆறாம் திணை.காமிலும் வெளிவந்த கவிதை. என் எண்ணத்தில் உதித்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.