வாழ்க்கை

பொன் நகை
வேண்டாம்
புன்னகை மட்டும்
போதுமென்றார்கள்!

எல்லோரும்
தலையாட்டினார்கள்
நானும்
ஆட்டினேன் தலையை....

ஒரு நாள்
தலை அசைத்தற்காக
காலமெல்லாம் கிடைக்கவில்லை.
புன்னகையும் பொன்நகையும்.....

கைத்தடியுடன் இருக்கிறேன்
நானும் எதிர்பார்ப்புடன்
புன்னகைக்காக.....

திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயக்கப்படவில்லை
சொர்ணத்தில்
நிச்சயக்கப்படுகின்றன
திரும்பிப் பார்க்க வைக்கிறது
என்னை மீண்டும் ......

எழுதியவர் : முனைவர் நா. சுலோசனா. (31-Oct-16, 10:01 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 139

மேலே