முனைவர் நாசுலோசனா- கருத்துகள்

மோ+தகம்---மோதகம். மோதகம் (கொலுக்கட்டை) மோ என்பது முன்னிலை அசைச்சொல். தகம் என்பது உஷ்ணம், சூடு என்ற பொருளைத் தருகிறது. அதாவது சூட்டில் ஆவியில் வேகவைப்பது கொலுக்கட்டை.

மடம் என்றால் பேதமை என்று பொருள். அதாவது அறியாமையைக் குறிப்பிடுவது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.

பிற மொழிகளின் தாக்கத்தினாலும் மோகத்தினாலும் தமிழ் மீது ஆர்வம் குறைந்துள்ளதைப் பார்க்கமுடிகிறது.

ஆறு வகைப்படும். உயிர் தொடர், நெடில் தொடர், ஆய்த தொடர், வன் தொடர், மென் தொடர், இடைதொடர்.

கவிதை சமூகத்திற்காக. காதல், கவிதை அத்தனையும் சமூகத்திற்குள் அடக்கம். சமூகத்திற்காகத்தானே படைப்புகள்.

எனக்குப் பிடித்த மாதம் செப்டம்பர். நினைவைப் போற்றவும் நினைவு கூறவும் பின்பற்றவும் என மாபெரும் சமூகப் புரட்சியாளர்களின் பிறந்த நாள், நினைவு நாள் என. செப்டம்பர் 5 டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் பிறந்த நாள். 11பாரதியின் நினைவு நாள். 15பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் நினைவு நாள், 17 தந்தை பெரியாரின் பிறந்தநாள். ஆன்மிகம் சார்ந்த பல கொண்டாட்டங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியது செப்டம்பர் மாதம்.

மென்மையானது என்பதற்காக மயிலிறகை அளவுக்கு மீறி வண்டியில்(சகடம்) ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும். அதைப்போல பகைவர்களின் பலத்தை அறியாமல் அவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டுபோனால் நம் பலம் முறிந்துவிடும். ஒருவரின் திறனுக்குக் கிடைத்த பரிசுக்கு என்றுமே அழிவில்லை.

முழுமையாகக் கிடைக்கவில்லையென்றாலும் மாற்றங்கள் ஏற்படுவதைப் பார்க்கமுடிகிறது. பல ஆண்டு அடிமைத்தனத்தை அவ்வளவு எளிதில் மாற்றிவிடமுடியாது.

திரையரங்கங்களில் தேசிய கீதம் ஒலிக்கச் செய்வதின்மூலம் தேசப்பற்றை வளர்த்துவிடமுடியாது. அது குருதியில் கலந்த தேச உணர்வாக இருக்கவேண்டும்.

உயிர் இருக்கும்போதே
உணர்வையும் உடம்பையும்
இழக்கிறான்.
நாயோடு நாயாக
குப்பையில் படுத்திருக்கிறான்.
நடப்பதற்கு
அடுத்தவர் துணையைத்
தேடுகிறான் இளமையிலே...
இளமையிலே
முதுமையைக் கண்டவன்
நம் தேசத்துக் குடிமகன்!!!

தோழரே படைப்புகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள். உணர்வுகள் படைப்பாகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.

இன்னா செய்தார் அவர்நாண நன்னயம் செய்துவிடல் என வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே. நம்முடைய மன்னிப்பு என்பது தான் துரோகிக்கு நாம் தரும் தண்டனை. மனசாட்சி உள்ள மனிதன் என்றால் திருந்துவான்.

குடும்பப் பொறுப்பற்ற
ஆண்களுக்கு
வாடகையில்லாத விடுதி
வீடு.

என் தாய்
சிரித்து
நான் பார்த்தறியாத
அவள் முகம்
அன்றலர்ந்த செந்தாமாரையாய்
மலர்ந்திருக்கிறது
புகைப்படத்தில்.....

வாழ்க்கையின் பயனைத் துய்ப்பதற்கு இல்லறம் சிறந்தது. இல்லறத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் தான் துறவறம் மேற்கொள்கின்றனர். மொத்தத்தில் அவரவர் மனநிலையைப் பொறுத்துதான் இல்லறமும் துறவறமும் அமைகிறது. வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளைச் சாமாளிக்க முடியாமல்தான் வெறுத்துப்போய் துறவறம் மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஞாநிகளும் யோகிகளும் பூண்டிருப்பது எல்லாம் கடந்த தவ நிலையாகும்.

எழுத்து.காம் தோழமைகளுக்கு வணக்கமும் நன்றியும். படைப்புக்கான கருத்தும் விமரிசனமும் தான் படைப்பையும் படைப்பாளியையும் ஊக்கப்படுத்தும் தூண்டுகோலாகும். ஆகையால் படைப்புக்கான கருத்துகளை வரவேற்கிறேன்.

ஒரு படைப்பு எல்லோருக்கும் போய்ச் சேர்வேண்டுமென்றால் எளிய நடை நல்லதுதான்.

தபுதார நிலை என்றும் சொல்லலாம்.

மனைவியை இழந்த கணவனுக்கு “விதவன்” எனத் தமிழிலும் விடொவ்ர் என ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.


முனைவர் நாசுலோசனா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே