சங்கேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சங்கேஷ்
இடம்:  rajapalayam
பிறந்த தேதி :  01-Feb-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Sep-2016
பார்த்தவர்கள்:  418
புள்ளி:  40

என்னைப் பற்றி...

காயம்பட்ட
கனவுகளினால்
கண்ணீர்
சிந்தி ;
கனவை
எழுத்தாக்கும்
கரிசல் காட்டு
எழுத்தாளன்.

கரை புரண்டு ஓடிய
தமிழ் வெள்ளத்தால்
வேரோடு பிடுங்கி எறியப்பட்ட
தமிழ் பித்தன்.

என் படைப்புகள்
சங்கேஷ் செய்திகள்
சங்கேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2017 9:08 pm

படைத்தவன் படைக்கச் சொல்லி
பாருக்கெல்லாம் பயிர்செய்த
உழவனின் உணர்ச்சிகளை கொன்று; தன் தாயயையே
வேசியென, வார்த்தையால்
சித்தரிக்கும் சீர்கெட்ட நாட்டில் ,
சிங்கமாய் கர்ஜிப்பதை மறுத்து;
அசிங்கமாய் கரைத்துணிக்கு கோஷம் போடும் பாமரக்கூட்டத்தில் , பட்டறிவையே பாரென நினைத்து பகலை எதிர்பார்த்து துயில்கொண்ட மங்கையின் கற்பையழித்த களவாணிகள் விடுதலையென தீர்ப்பினால் என்னுள் தோன்றிய கேள்வி
'சட்டம் யார் கையில்?'

மேலும்

சங்கேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2017 7:47 pm

வழிப்போக்கனாய்
சுற்றிய
என்னை
ஏளனப்பார்வையில்
நோட்டமிட்டாள்;

பிறந்தநாளென
அருகே வந்து
புதிதாய்
என்னுள்
காதலைப் பிரசவித்தாள்;

குறுக்கெழுத்துப்
புதிர்களாய்
குறுஞ்செய்தியால்
குடைக்குள் மழையாய்
என்னை ஈரமாக்கினாள்;

நெற்றிமேல்
சரிந்த முடிக்கற்றையை
இருவிரலால்
கோதுகையில்
கோலங்களைப் பூக்கச்செய்தாள்
என்
மனவாசலில்;

மாதொரு
மாணிக்கமென
மங்கையவளை கண்டேனே;
முதல்ப்பார்வை
மட்டும்
கொண்டென்னனுள்
காதல்
தோட்டம் மலரச் செய்ததாள்!

மேலும்

மரணம் வரை அந்த பார்வைகளின் தாகம் தீராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 10:06 pm
உங்கள் வரிகள் மிகவும் அருமை............வாழ்த்துக்கள்... 12-Dec-2017 8:54 pm
சங்கேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2017 7:29 pm

அவள்
மறுத்ததால்
செடியிலேயே
செத்துப்போகின்றன;
என்
தோட்டத்துப்பூக்கள்!

மேலும்

மலர்ந்து சிரித்திட என் தோட்டத்து பூக்கள் மீண்டும் வருவாளா அவள் ? ----இனிமை 12-Dec-2017 10:45 pm
ஆராதனைகள் ஏமாற்றம் கண்டதில் உள்ளம் அழுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 10:02 pm
சங்கேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 12:00 am

புதிதாக பூத்திருந்த அந்த ஒற்றை ரோஜாப் பூவை செடியிடமிருந்து கடனாக எடுத்துக் கொண்டான் கண்ணன்.அதன் மணத்தில் தன் மனதைப் பரிகொடுத்து பழைய நினைவுகளில் மூழ்கினான்.

ஐயா?,நேரமாச்சு எந்திரிங்க,அம்மா காபி போட்டுட்டு இருக்கா,அப்பா இதோ தோசை ஊத்தப் போறேன்;சீக்கிரமா குளிச்சுட்டு வாங்க,இன்னைக்கு காலேஜுக்கு போகனும்ல? கண்ணனின் அப்பா கனிவாக அவனை தூக்கத்திலிருந்து எழுப்ப அவனும் எழும்பி கல்லூரிக்குச் செல்ல ஆயத்தமானான்.

அடுத்த சில நிமிடங்களில் கமகமவென்று மணங்கமல கல்லூரிக்கு கிளம்பினான்.வீட்டிலிருக்கும் அனைவரின் ஆசீர்வாதத்தையும் மிச்சமின்றி வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான்.

கல்லூரியில் சேர்த்து கனத்த

மேலும்

சங்கேஷ் - சங்கேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2017 12:18 am

பால்கனி
மே மாத கோடை வெயில் மேகத்தை கரைத்து கோடை மழையாக பொழிந்தது கொண்டிருந்தது.இதமான அந்த மழையை தன் வீட்டு பால்கனியிலிருந்து ரசித்துக் கொண்டிருந்தான் சபரி.சிறு வயதிலிருந்தே மழையின் மீது மோகம் கொண்ட அவனின் மனைவி சித்ராவிற்கு மழையே ஆகாது.இதுத் தெரிந்திருந்தும் வீட்டிற்குளிருந்த மனைவியை கொத்தாக அள்ளிவர திட்டமிட்டவனாய் உள்ளே சென்றான்.
"சித்ரா.....?"ஒரு வித ஏக்கம் படர அழைத்தான்.
"இதோ வரேன் சார்,ஒரு நிமிஷம்"என பாத்ரூமிலிருந்து குளித்து வியர்த்த உடலை வெளிரிய சிவப்பு நிற நைட்டிக்குள் நுழைத்தவாறு வந்தாள்.
வந்தவளை மாரோடு அணைத்துக் கொண்டு வெளியே இழுத்துச் சென்றான். சில நிமிட திமிறலுக்குப் பின் பால்

மேலும்

கருத்திற்கு நன்றி 29-Jun-2017 6:21 pm
உலுக்கி விட்டது நண்பா.. அருமை.. 28-Jun-2017 10:22 pm
சங்கேஷ் - சங்கேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2017 12:01 am

விட்டுப் போனாய்
விட்டிலாய்
விளக்குகள் விலகிய
இருள்
தெருக்களில்
அலைகிறேன் எனக்கான
இணையுனைக் காண!

மேலும்

சங்கேஷ் - சங்கேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2017 12:06 am

உலா வரும்
உன்
கூந்தல் காற்றிலே ;
முகம் பட
என்
நாட்கள் தொலைத்தேனே!

மேலும்

சங்கேஷ் - சங்கேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2017 12:13 am

உழைத்துப் பார்!
உச்சந்தலை சூடேறும்
உள்ளமது குளிரும்;
உழைத்துப் பார்!
உன்னுடல் களைப்பேறும்
உன்மனம் களைப்பாறும்;
உழைத்துப் பார்!
சிந்திய வியர்வை முத்தாகும்
உன் எண்ணமெல்லாம் வித்தாகும்;
உழைத்துப் பார்!
உன் கண்ணீருக்கு வேலையிராது
இல்லை கண்ணீர்சிந்த நேரமிராது;
உழைத்துப் பார்!
கனவுகள் மெய்யாகும்
பொழுதுகள் பொய்யாகும்;
உழைத்துப் பார்!
ஊருக்கே உன்னைப் பிடிக்கும்
எனவே, உனக்கும் உன்னைப் பிடிக்கும்.

மேலும்

சங்கேஷ் - சங்கேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2017 12:18 am

பால்கனி
மே மாத கோடை வெயில் மேகத்தை கரைத்து கோடை மழையாக பொழிந்தது கொண்டிருந்தது.இதமான அந்த மழையை தன் வீட்டு பால்கனியிலிருந்து ரசித்துக் கொண்டிருந்தான் சபரி.சிறு வயதிலிருந்தே மழையின் மீது மோகம் கொண்ட அவனின் மனைவி சித்ராவிற்கு மழையே ஆகாது.இதுத் தெரிந்திருந்தும் வீட்டிற்குளிருந்த மனைவியை கொத்தாக அள்ளிவர திட்டமிட்டவனாய் உள்ளே சென்றான்.
"சித்ரா.....?"ஒரு வித ஏக்கம் படர அழைத்தான்.
"இதோ வரேன் சார்,ஒரு நிமிஷம்"என பாத்ரூமிலிருந்து குளித்து வியர்த்த உடலை வெளிரிய சிவப்பு நிற நைட்டிக்குள் நுழைத்தவாறு வந்தாள்.
வந்தவளை மாரோடு அணைத்துக் கொண்டு வெளியே இழுத்துச் சென்றான். சில நிமிட திமிறலுக்குப் பின் பால்

மேலும்

கருத்திற்கு நன்றி 29-Jun-2017 6:21 pm
உலுக்கி விட்டது நண்பா.. அருமை.. 28-Jun-2017 10:22 pm
சங்கேஷ் - Raiz அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2016 4:39 pm

வற்றி
பல வருட
பருவமழை
காணாத
ஓடையில்
ஈரம் தேடுகின்றேன். . .
அவள் இல்லா
என் வாழ்வில்
அவள் நினைவுகளை
தேடுவது போல. . .

மேலும்

தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதோ? 09-Nov-2016 5:10 pm
மனதில் பதிந்த நினைவுகள் மரணம் வரை அழிவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2016 7:03 am
சங்கேஷ் - சங்கேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2016 8:07 pm

இரையின்றி
கரையும் இரைப்பையின் கதறலுக்குத் தெரியாது;
கரையெங்கும் தேடியும்
இரையின்றி ஏமாந்த
என் நிலை!

மேலும்

தோழரே என் கவி அனைத்திற்கும் கருத்து அளித்து என்னை ஊக்கபடுத்தியதற்கு நன்றி, அனைத்து எழுத்தாளரும் எதிர்பார்ப்பது கருத்துகள் தான். கருத்தளிப்பவர்கள் தான் எழுத்தாளர்களின் வாழ்க்கையையே தீர்மாணம் செய்கின்றனர். அதே போல என் வாழ்வை தீர்மானிப்பதும் தங்கள் போன்றோரின் கருத்துகள் தான் 25-Oct-2016 7:33 pm
கையேந்தி வாழும் வாழ்க்கை நொடிக்கு நொடி மரணத்துக்கு ஒப்பானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2016 4:53 pm
சங்கேஷ் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2016 4:43 pm

​​முதுமையில் நடுங்குகிறதெனது கரங்கள்
இளமையில்​ நடுங்கவைத்ததென் கரங்கள் ​!
வளர்ந்திட்ட அகவையினால் இந்நிலையோ
தளர்ந்திட்ட மேனியினால் ​வந்தவிளைவோ !

​உழைத்துக் கழித்தேன் காலத்தை நானும்
​பிழைத்து வாழ்ந்திட ஞாலத்தில் நாளும்
நுழைத்த நுண்ணறிவு உதவியது என்றும்
தழைத்தக் குடும்பமும் வளர்ந்தது நன்றே !

​ஏக்கமும் பலவுண்டு என்னின் வாழ்க்கையில்
​தூக்கமும் தொலைத்த துயர்களும் நிறைந்தது !
நோக்கம் எதுவுமின்றி வாழ்ந்த வாழ்க்கையும்
ஆக்கம் ஏதுமில்லா வழிப்போக்கன் நிலைதான் !

பிள்ளைகளும் பிறந்து கிளைகளாக பிரிந்ததும்
பெற்றவரைக் கைவிடுவர் பெரியவர் ஆனதும் !
வாடிக்கை ஆனது வேடிக்கையாய் நிக

மேலும்

முதிர்ந்தாலும் மனதின் உறுதி உதிராது இருந்தால் போதும் வாழ்க்கை வசப்படும். கவியின் வரிகள் அருமை... வாழ்த்துக்கள் அன்பரே ..... 01-Oct-2016 7:17 pm
வாழ்க்கையின் நிலை இது தான் தொடக்கம் முடிவுரையாகும் முடிவுரையும் தொடக்கமாகும் 01-Oct-2016 3:23 pm
மிக்க நன்றி சந்கேஷ் ..பயமே வேண்டாம் எதையும் எதிர்கொள்வோம் வாழ்வில் 26-Sep-2016 9:54 pm
முதுமையை நினைத்து நடுங்க வைத்து விட்டது உங்கள் படைப்பு 26-Sep-2016 8:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram
வாசு

வாசு

தமிழ்நாடு
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (20)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

மேலே