என்னுள் தோன்றிய கேள்வி

படைத்தவன் படைக்கச் சொல்லி
பாருக்கெல்லாம் பயிர்செய்த
உழவனின் உணர்ச்சிகளை கொன்று; தன் தாயயையே
வேசியென, வார்த்தையால்
சித்தரிக்கும் சீர்கெட்ட நாட்டில் ,
சிங்கமாய் கர்ஜிப்பதை மறுத்து;
அசிங்கமாய் கரைத்துணிக்கு கோஷம் போடும் பாமரக்கூட்டத்தில் , பட்டறிவையே பாரென நினைத்து பகலை எதிர்பார்த்து துயில்கொண்ட மங்கையின் கற்பையழித்த களவாணிகள் விடுதலையென தீர்ப்பினால் என்னுள் தோன்றிய கேள்வி
'சட்டம் யார் கையில்?'

எழுதியவர் : sangesh (23-Dec-17, 9:08 pm)
சேர்த்தது : சங்கேஷ்
பார்வை : 229

மேலே