மனமே மனமே
மனமே மனமே,
எனது மனமே,
எங்கே சென்றயோ,
எங்குதான் செல்கின்றாயோ!!!
சில நொடிகளில்
உலகைக் காண்பிக்கிறாய்,
சில நேரங்களில்
வாழ்வை இருளாக்குகிறாய்,
நிரந்தர நிலையில்லா நாடோடி,
பல முகமுடி அணிந்த கோமாளி,
உணர்ச்சி உணர்வை வைத்து விளையாடும் வித்தகன் நீதானே ….
அடம்பிடித்து அடைந்ததை அடுத்தகணமே எரிந்திடும் குழந்தையும் நீதானே,
உன்னை ஓர்நிலைப்படுத்தாமல்
நான் நிலைத்தடுமாறுகிறேன்,
உன்இடமும் குணமும் அறியாமல்.
உன்னைத் தேடி அலைகிறேன் ,
காலங்கள் செல்ல செல்ல
எண்ணமும் நினைவும் நீதான்
என்பதை உணர்ந்துகொண்டேன் -
இனி
நல்விணைகள் விதைத்திடுவேன்......