உழைத்துப்பார்

உழைத்துப் பார்!
உச்சந்தலை சூடேறும்
உள்ளமது குளிரும்;
உழைத்துப் பார்!
உன்னுடல் களைப்பேறும்
உன்மனம் களைப்பாறும்;
உழைத்துப் பார்!
சிந்திய வியர்வை முத்தாகும்
உன் எண்ணமெல்லாம் வித்தாகும்;
உழைத்துப் பார்!
உன் கண்ணீருக்கு வேலையிராது
இல்லை கண்ணீர்சிந்த நேரமிராது;
உழைத்துப் பார்!
கனவுகள் மெய்யாகும்
பொழுதுகள் பொய்யாகும்;
உழைத்துப் பார்!
ஊருக்கே உன்னைப் பிடிக்கும்
எனவே, உனக்கும் உன்னைப் பிடிக்கும்.

எழுதியவர் : சங்கேஷ் (28-Jun-17, 12:13 am)
சேர்த்தது : சங்கேஷ்
பார்வை : 253

மேலே