காதல்

என்
இதயக் கமலத்தில்
ரோஜாவை
நட்டு வைத்தாய்!

அன்பிலும் பாசத்திலும்
பூத்துக் குலுங்கியது
ரோஜா மட்டுமல்ல
என்
இதயக் கமலமும்தான்...

ரோஜாக்களைப்
பறிக்க வந்தவன்
பறித்தது
ரோஜாக்களை அல்ல....
வளர்ந்து
பூத்துக் குலுங்கிய
ரோஜாச் செடியை....!

எழுதியவர் : முனைவர் நா. சுலோசனா. (31-Oct-16, 10:19 pm)
Tanglish : kaadhal
பார்வை : 82

சிறந்த கவிதைகள்

மேலே