ராம்கி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராம்கி
இடம்
பிறந்த தேதி :  20-Jul-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Mar-2014
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  17

என் படைப்புகள்
ராம்கி செய்திகள்
ராம்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2015 7:15 pm

இனிதே ...கனியும்

வானவில்லின் வண்ணங்களை
மட்டும் வரையறை ...
என எண்ணாதே
பல வண்ணங்களை
காணலாம் ....மனதில்
உற்சாக எண்ணத்தை
வரையறை செய்தால்...
வானில் நீயும்
பறக்கலாம்.....
தடைபடும் துன்பங்கள்
உடைபடும் கல்லாக்கு...
சிந்தும் வியர்வைகள்...
உன்னை வெற்றிக்கு
வித்திடும் விதைகள்..
வாசனையில்லா மலர்கள்
தித்திக்கும் கனியாகும்...
உன் குறைகளை ...
நிறையாக்கு...
உறுதியான உழைப்பு
உண்மையானல்...
காலம் உனக்கு
ஒரு நாள்...நிச்சயமாக
கனியும்.....!
வெற்றிக்கனி நீ....
வாசனைமலர்கள்...
மாலையாய்....வந்தே
தீரும்......

@ramki

மேலும்

ராம்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2015 6:25 pm

பல நாள்...
ஏக்கம்
நிறைவேற்றி
மக்களையும்
மாக்களையும்...
மழையில்
நனைந்தது....
(மா) நிலம் ...

மேலும்

ராம்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2015 5:53 am

பார்த்ததும்
தெரிந்தது....
ஆடையில் தையல்கள்..
ஏதும் அறியா...பிஞ்சு
சந்தோசமாக நடையில்

பார்த்ததும்
தெரிந்தது....
பசியின் கொடுமை.....
கயிற்றில் நடனம்
சில்லறைகள் சத்தத்தில்

பார்த்ததும்
தெரிந்தது....
முதுமையின் அவலத்தை
சாலைகளில் இடம்பிடித்து
உறவுகளால் உறங்கியது


பார்த்ததும்
தெரிந்நது
செய்தவர் பெருமை...
புகழ் பாடுகிறது
உயரிய விளம்பரம் ....

நல் உடையவனோ...
சந்தோசமின்றி
அறுசுவை முன்பிருந்தாலும்
சுவையில்லா...உணவில்

தள்ளாட காலம்
வரும்.....சாலையில்
ஆசை விடவில்லை ...
அடுத்ததில் பெரிதாக ...

மேலும்

ராம்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2015 10:11 pm

கைப்பிடித்து நடை
பழகினாயே....
இதழ் மலர்ந்து
தேன் உதிர்த்தாயே
அம்மா.....
ஆனந்தம் மகளே!
கண்ணீர் வழிய
ஆசியர் முன்
அமர்ந்தாய்....
மனமின்றி காத்திருந்தேனடி
கதவருகே....மாலைதான்
வந்தது....உன்னையும்
சேர்த்தே கண்ணத்தில்
இதழ் பதித்தாயே
அன்பின் தளிரே..
தந்தையும் மகிழ்ந்தாரே
அறிவாய் பயின்றாய்...
துடிப்பாய் விளையாடினாயே
உன்னால் விழாவையும்
மிஞ்சி நம்வீடு....
ஒவ்வொரு பண்டிகையும்
வசந்தத்தோடு...
நாங்கள் காணா
கல்லூரியில் உன்பெயர்
பட்டமளிப்பில்...
கண்களில் நீர் வழிந்தது...
நட்புக்களையும்
பெருக்கினாய்........
சமூகத்தின்...சாயலுக்கு
இன்று ...ஏன்
சென்றாய்?.......
கைப்பிடித்து பழக்கி

மேலும்

அழகிய படைப்பு... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 12:58 am
ராம்கி - ராம்கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2015 7:56 pm

உன்னை மட்டுமே ...
நினைப்பதால்
கண்கள்...உறங்க
மறக்கின்றன..
நீல வானமும்
காலடி சுவட்டில்..
இரவும்...கூட
பகலாக
வெயிலில் நனைந்து
மழையில்காய்கிறேன்..
உன் குயிலோசை
கேட்டே...
மனம்....துயில் பாடும்
புன்னகை சிந்தும்
பொன்மலரே...
பூமாலை சூடி
வலக்கை பிடிக்க
வலம் வந்தேனே...
மணம் காண்போமே..
சிறகுகள் இன்றி
பறந்து ...விண்ணில்
கூடமைப்போம்...

மேலும்

Nanri.. 29-Aug-2015 7:35 am
காதல் வானில் எல்லைகளே இல்லை மனம் சொல்லும் பாதையில் பயணம் தொடர் கதையே 29-Aug-2015 7:10 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 11:24 pm
ராம்கி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2015 3:08 pm

வீட்டின் தெரு வாசலிலேயே நின்றிருந்த அஞ்சலையையும் அவள் அருகில் நின்றிருந்த சுகந்தியையும் அலட்சியமாகப் பார்த்த பொன்னம்பலம், “என்ன அஞ்சலை?“ என்று கேட்டார்.

“இந்த மாச கடன் பணத்த கொண்டாந்திருக்கிறேங்க...“ தயங்கித் தயங்கிச் சொன்னாள் அஞ்சலை.
“நா கொஞ்சம் வேலையா இருக்கேன். உள்ளே அம்மாகிட்ட குடுத்துடு.“

“சரிங்க ஐயா“ என்று சொன்னவள் வீட்டைச் சுற்றிக்கொண்டு கொல்லை புறத்திற்குச் சென்றாள். “அத்தை... ஏன் நேரா வீட்டுக்குள்ள போகாம இப்படி சுத்திக்கினு போறீங்க?“ என்று கேட்ட சுகந்தியைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு, “இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்பேன்னு தான் என் கூட வரவேண்டாம்ன்னு சொன்னேன்.

மேலும்

Mikaum nanru... 26-Aug-2015 5:29 pm
ராம்கி - சவீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2015 5:21 pm

உன்னை நேசித்த இதயத்தை
ஏமாற்றி விடாதே .!!!
பின்பு
நீயே தேடி சென்று நேசித்தாலும்
அது
உன்னை நேசிக்காது .!

மேலும்

நன்றி 24-Aug-2015 10:08 am
சரியே சரியே.. 24-Aug-2015 9:00 am
நன்றி 24-Aug-2015 8:20 am
உண்மைதான் இன்று பலர் இதையே நாகரிகமாய் வைத்துக் கொண்டு உள்ளனர் 23-Aug-2015 11:37 pm
ராம்கி - ராம்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2015 8:33 pm

வண்ணத்தில் பிறந்த ஓவியமே
எண்ணத்தில் மலர்ந்த காவியமே
உள்ளத்தில் கலந்து
வெள்ளத்தில் மிதக்கிறேன்
கரை சேர்ப்பாயா
இரை காணும் மீனும்
மெய் தீண்டுதே
விழி உன்னை தேடுதே
கை பிடித்தாயே....
மெய்க்காதல்....நாம்
என்றாயே!!

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Aug-2015 3:07 am
நன்று அழகான சொல்லாடல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Aug-2015 6:51 am
ராம்கி - ராம்கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2015 5:10 pm

நீரில் தாமரை
முள்ளில் ரோஜா
வெஞ்சுரத்தில் பொன்
கல்லில் சிலை
பிறப்பிடம் எண்ணாதே
உன்னை சிறப்பிடம்
ஆக்கு....
வாழ்வே வசந்தமாகும்.

மேலும்

நன்று 21-Aug-2015 8:03 pm
Nanri 21-Aug-2015 7:13 pm
அப்பிடி போடு அண்ணே ! கவிதையும் படமும் இனிமை அழகு ஒரு பரிந்துரை ---நீரில் என்பதை விட சேறில் என்பது இன்னும் பொருத்தம் வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 21-Aug-2015 6:51 pm
கருத்து பொதிந்த வரிகள் அழகு... 21-Aug-2015 6:51 pm
மேலும்...
கருத்துகள்

மேலே