கண்ணீர்

கைப்பிடித்து நடை
பழகினாயே....
இதழ் மலர்ந்து
தேன் உதிர்த்தாயே
அம்மா.....
ஆனந்தம் மகளே!
கண்ணீர் வழிய
ஆசியர் முன்
அமர்ந்தாய்....
மனமின்றி காத்திருந்தேனடி
கதவருகே....மாலைதான்
வந்தது....உன்னையும்
சேர்த்தே கண்ணத்தில்
இதழ் பதித்தாயே
அன்பின் தளிரே..
தந்தையும் மகிழ்ந்தாரே
அறிவாய் பயின்றாய்...
துடிப்பாய் விளையாடினாயே
உன்னால் விழாவையும்
மிஞ்சி நம்வீடு....
ஒவ்வொரு பண்டிகையும்
வசந்தத்தோடு...
நாங்கள் காணா
கல்லூரியில் உன்பெயர்
பட்டமளிப்பில்...
கண்களில் நீர் வழிந்தது...
நட்புக்களையும்
பெருக்கினாய்........
சமூகத்தின்...சாயலுக்கு
இன்று ...ஏன்
சென்றாய்?.......
கைப்பிடித்து பழக்கிய
நாங்கள் தனியே
தவிக்கிறோம்...
நீ யாரோடோ கைப்பிடித்து
நிற்கிறாய்....
காதல்
என்கிறாய்...

எழுதியவர் : raamki kvs (28-Oct-15, 10:11 pm)
Tanglish : kanneer
பார்வை : 65

மேலே