நெருக்கம் உறக்கம், இறுக்கம் பிணக்கம்
"மனைவியுடன் சண்டையிட்டால்
லைப் -எ ஸ்டான்ட்ஷ்டில்."
"நண்பனுடன் சண்டையிட்டால்
மனசுக்குள் டிராபிக் ஜாம்"
____________________________________
சொந்தம் நட்பு
சூழ்ந்து இருந்தால்
மனசெல்லாம்
சுகம், சந்தோஷம்,
இல்லையேல்
எரிச்சல், வருத்தம்,
இடறல், கோபம்..
அன்பான உறவுகளின்
அரவணைப்போடு வாழ்பவர்களை
தோல்வியும் நோயும்
நெருங்க
பயம் கொள்ளும்
அன்பற்ற வெறுமையே
அத்தனைக்கும்
நோயாகும்
அன்பினால் நிறைந்தால்
அகிலமே அழகாகும்
வாழ்வை
எப்போதும் அழகாக்கும்!