எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு. காரணம் ஏன்...

  தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு. காரணம் ஏன் தெரியுமா?


*தேன்*கொண்டு வந்தவனை பார்த்து நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். 
அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்..

ஐயா நீங்கள் கூறியதை நினைத் தேன் !
கொல்லிமலைக்கு நடந் தேன்!
பல இடங்களில் அலைந் தேன்! 
 ஓரிடத்தில் பார்த் தேன் !
உயரத்தில் பாறைத் தேன்!
எப்படி எடுப்பதென்று மலைத் தேன்!
கொம்பொன்று ஒடித் தேன்! 
ஒரு கொடியை பிடித் தேன் !
ஏறிச்சென்று கலைத் தேன்! 
 பாத்திரத்தில் பிழிந் தேன்!
வீட்டுக்கு வந் தேன்! 
கொண்டு வந்ததை வடித் தேன்!
கண்டு நான் மகிழ்ந் தேன்!
ஆசையால் சிறிது குடித் தேன் !
மீண்டும் சுவைத் தேன் !
உள்ளம் களித் தேன்! 
உடல் களைத் தேன் !
உடனே படுத் தேன்!
கண் அயர்ந் தேன்!
அதனால் மறந் தேன் !!

காலையில் கண்விழித் தேன்!
அப்படியே எழுந் தேன் !
உங்களை நினைத் தேன்! 
தேனை எடுத்தேன்!
அங்கிருந்து விரைந் தேன் !
வேகமாக நடந் தேன்! 
இவ்விடம் சேர்ந் தேன் ! 
தங்கள் வீட்டை அடைந் தேன் !
உங்களிடம் கொடுத் தேன் !
என் பணியை முடித் தேன்.!!
என்றார் அதற்கு தேன் பெற்றவர் 
தேனினும் இனிமையாக உள்ளது உமது பதில் 
இதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை
"" தமிழ்த்தேன் ""என்று உரைத்தனரோ 
என கூறி மகிழ்ந்தேன் என்றார்.*

படித்ததில் ரசித்தது...*

----------------------
தமிழ் மொழியை விட சிறந்த மொழி உலகில் வேறு ஏது ?ஆனால் சிலர் தொன்மை வாய்ந்த செம்மொழியாம் தமிழை புறக்கணிப்பதும் ,அழிக்க நினைப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. 

தமிழர்கள் இதிலாவாது தாய்மொழி என்ற உணர்வோடு 
ஒன்றிணைந்து போராடினால் எந்தக் கொம்பனாலும், 
எந்த காலத்திலும் அழிக்க முடியாது. 


பழனி குமார்  

நாள் : 24-Jul-21, 7:24 pm

மேலே