ப்ரதிலிபியின் யாதுமாகி நின்றாள் போட்டி
மகளிர் தினப் போட்டி - 'யாதுமாகி நின்றாள்'
வணக்கம். 'யாதுமாகி நின்றாள்' - மகளிர் தினத்தை ஒட்டி ப்ரதிலிபி நடத்தும் அடுத்த போட்டி.
காலமாற்றத்திற்கு ஏற்ப பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து பெண்களின்/ஆண்களின் பார்வைகள், பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள்/மாற்றுக்கருத்துக்கள், பெண்களின் உடை, உடல், மனம் சார்ந்த அரசியல், அது குறித்த பார்வைகள் என பெண்கள் சார்ந்து எதைக்குறித்தும் எழுதலாம். வாசகர்கள் பரிந்துரைத்த சில தலைப்புகளும் கீழே கொடுப்பட்டிருக்கின்றன. அதை ஒட்டியும் எழுதலாம். தலைப்புகள் பின்வருமாறு :
1) நேற்றைய பெண்கள் பெரும்பாலோரிடம் அதிகம் புகார் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய பெண்கள்? நாளைய பெண்கள்? அவர்கள் நிலை எப்படி இருக்க வேண்டும்?
2) இன்றைய பெண்கள் முன்னேற்றம் என நினைப்பது உண்மையில் முன்னேற்றம் தானா? ஆண்களின் அதிகாரம் பெண்கள் முன்னேற்றத்தைத் தடை செய்கிறதா? அதிகாரப் பரவல் உள்ளதா?
3) இணையம் எந்த அளவு மகளிரை மாற்றியுள்ளது, அதனால் மகளிருக்கு மற்றும் அவர்களால் மற்றோர்க்கு உண்டான நன்மை, தீமைகள் என்னென்ன?
கதை, கவிதை, கட்டுரை என எந்த விதமான படைப்பாகவும் இருக்கலாம்.
வாசகர்கள் மட்டுமே வெற்றி பெறும் படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள் ( அந்த முறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் )
தொடர்புக்கு - 9206706899 / 7022370004
பரிசுத்தொகை – முதல் பரிசு – 1,500 ரூ ; இரண்டாம் பரிசு – 1000 ரூ ; மூன்றாம் பரிசு – 500 ரூ.
ப்ரதிலிபியின் யாதுமாகி நின்றாள் போட்டி போட்டி | Competition at Eluthu.com