புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021

விடியல் நமதாக
வித்தாரம் விருந்தாக
புலரி எழுந்தோங்க
புன்னகை எமதாக்கு
செவ்விது வழிந்தொழ
செறிவு வலுக்கட்டும்
எங்கும் இன்பம்
என்றும் நிலைக்கட்டும்
வயதறியா ஆசைகள்
வளமாக செழித்தோங்க
நோயற்ற பெருவாழ்வு
நோம்பின்றி கிட்டட்டும்
உரவம் உரமாக்கி
உயர்வை எட்டிடுவோம்
புத்தாண்டு பூக்கட்டும்
புகழொளி போர்க்கட்டும்

எழுதியவர் : அருண்மொழி (1-Jan-21, 12:32 am)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 179

மேலே