கேள்விக்குறி

நீ இமைக்கின்ற போதெல்லாம்
இமையாகி போவேனா?
நீ அணைக்கின்ற போதெல்லாம்
தடுமாறி வீழ்வேனா?
என் தனிமைக்கு துணைப்புரிய
உன் நினைவுகளை
மறவாமல் அழைப்பேனா?
உன் இதயத்தில்
என் காதலை தேக்கி
எந்நேரமும் உனக்காகவே துடிப்பேனா?
உனது என்று
நீ பதுக்கும் ஆசையில்
முளைக்காமல் நான் போவேனா?
ஊடல் என்று
நீ விலகும் வேளையில்
நிழலாய் தொடர மறப்பேனா?
நான்
முகவரியில்லா கடிதமானாலும் - நீ
படித்திட மட்டுமே பிறந்தேனா?
உன் விழிப்போடும் கவிதையானாலும் - அதன்
விளக்கம் கேளாமலே படிப்பேனா?
உன்னுயிருக்கும்
என்னுயிருக்கும்
பாலம் அமைத்து
வழி செய்திடுவேனா?
உன் மூச்சிக்காற்றிலே
என் அல்ப பேராசைகளை புதைத்து வைப்பேனா???
நீ நான் என்ற
இரண்டு தனிச்சொற்களையும்
இணைத்து புதுச்சொல்லொன்றை
படைப்பேனா???
என் கண்கள் காணும்
தூரம்வரை
உன் உருவத்தை
வைத்தே ரசிப்பேனா???
இனி
தேடல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து முடிப்பேனா???
இல்லை
உன்னை தேடி தேடியே
தொலைவேனா???
என் கவிதைகள்கூட
நிறைய
கேள்விகளை சுமக்கிறது
உன் நிழலைக்கூட
நான்
சுமப்பதுபோல...
#கவிதை_கற்பனை_மட்டுமே
@ஸ்ரீதேவி