காதல் உலா

ஒளிந்திருந்து
நம் மன உரசலில்
பொறி தட்டி
வெளிக் கிளம்பிய
இந்தக் காதலை
இப்போதே நாம்
கொண்டோடுவோமா?

நீரிலே நீந்திக்களிப்போம்
பின்பு காற்றூர்தியில்
வானுலா செல்வோம்
மேகங்களோடு
கைகுலுக்கி
வின்மீன்ககளை
நலன் விசாரித்து
ஆனந்தமாய்
வான் வெளியில்
மிதந்து திரிந்து
காதல் மீன்களாய்
மழை வாகனத்தில்
மீண்டும் பூமிக்கு
இறங்கி வருவோமா ?

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (18-Apr-18, 2:40 pm)
Tanglish : kaadhal ulaa
பார்வை : 195

மேலே