இடைவெளி இனியெதுக்கு
ஆண்: வானெல்லாம் முகிலாக,
முகிலெல்லாம் நீயாக,
விழுந்தாயே மழையாக,
விதையாகி நான் போனால் என்ன?
பெண்: உறங்காத கனவாகிட,
உனைசேரும் நாள் பார்த்திட,
ஊதகாத்திலும் உயிர் வேர்த்திட,
உறையாமல் நீ பார்த்தால் என்ன?
ஆ: இணையாக நீ நின்றால்
பெ: இடைவெளி இனி எங்கே?
ஆ: நிழலாக நான் வீழ்ந்தால்
பெ: நிலமாக மாறேனா?
பெ: கண்ணாடி முன்னாடி
நான் நின்றால் நீதானே தெரிகின்றாய்...
ஆ: கண்ணாலே எனையள்ளி
மையாக்கி விழியோரம் சேர்கின்றாய்...
பெ: காற்றாக நீ மாறி
காதோரம் கதைநூறு சொல்வாயா?
ஆ: ஊற்றாக உருமாறி
உடலோடு உயிராகி போவாயா?
பெ: இனி காலங்கள் தோறும் உன்னோடு...
ஆ: அந்த காதலும் தொடரும் பின்னோடு...
பெ: காதை தீண்டும் வெப்பம் போதுமே...
பெ: விடியாத இரவேது?
விடியல்கள் புலரட்டும் நம்மோடு...
ஆ: விழுந்தாயே விழியோடு
விலகாமல் முளைப்போமா விண்ணோடு...
பெ: நீ சொன்னால் மழையாவேன்!
நனைந்தாலும் உனைதாங்கும் குடையாவேன்...
ஆ: மறப்பேனா? உனைநானும்
மரணப்பினும்! மடிசேரும் உயிர்போதும்...
பெ: ஒரு தீண்டல்கள் போதும் கண்ணாலே!
ஆ: உயிர் தேடலும் தொடங்கும் உன்னாலே!
பெ: அருகில் வந்தால் கரைந்தே மறைவேனா?
@ஸ்ரீதேவி
#கவிதை_கற்பனை_மட்டுமே