காதல்
உன்னை உள்ளத்தில் குடிவைத்து உட்பக்கம் தாழ் போட்டேன்
எதை கொண்டு எறிந்தாலும் வெளி விட மாட்டேன்
உன்னை மழலைப் போலவே பார்ப்பேன்
மழையை போலவே சேர்ப்பேன்
அன்னம் ஊட்டி கொஞ்சுவேன்
அன்னையையும் விஞ்சுவேன்
சண்டையிட்டால் இரசித்துவிட்டு
சடுதியில் சரணடைவேன்
கவிதை சொல்லி கால் பிடித்து தூங்க வைப்பேன்
கனவில் வந்தும் களவாடுவேன்
அதிகாலை முதலே உறவாடுவேன்
உயிர் உனக்கென்றே உயில் எழுதுவேன்
உன்னொடே உடன்கட்டை ஏறுவேன்