காதல்

செக்கச் சிவந்தவளே
வெட்கத் தகுந்தவளே
காசு வாங்காமலே
காட்சி தருபவளே
நீ புடவை கட்டிய பறவையே
நீ வைக்காத பூக்கள் விதவையே
உன் மேனியை தேனீக்கள் சேர்த்ததா
முதல் வகுப்பிலே உன் முகம் தேர்ந்த்தா
உன் கூந்தலிலும் மலர்கள் வளர்ந்திடுமே
உன் கண் பார்த்தால் கவிதை பிறந்திடுமே
உன் விரல் பட்ட இடமெல்லாம் கனிம வளமே
உன் கால் பட்ட இடமெல்லாம் சுற்றுலா தலமே
நீ புன்னகைத்தால் புயல் அடிக்குமே
நீ அழுதால் என் இதயம் வெடிக்குமே

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (26-Jan-19, 3:31 pm)
சேர்த்தது : கைப்புள்ள
Tanglish : kaadhal
பார்வை : 75

மேலே