அவள் அழகு
உந்தன் மை இட்ட
கயல் விழிகளில்
நீ பூட்டிவைத்த மாயம் யாதோ
நானறியேன் , அவ்விழிகளிரண்டும்
எனைப் பார்த்து ஒரே ஒரு முறைதான்
மூடி திறந்தன - சுனாமி அலைபோல்
என் மனதை உன்னுள் இழுத்துக்கொண்டது
என் மனதை எங்கே தொலைத்துவிட்டேன்
என்று என்னை ஏங்கவிட்டதையடி பெண்ணே
உந்தன் பார்வை இப்படி என்றால் பெண்ணே
உந்தன் புன்னகையோ......ஓ... என்னென்பேன் அதை
அது ஒரு அழகிய பூக்கத்துடிக்கும் தாமரை மொட்டோ!
இதோ என்னுடன் பேசிய நீ, சிரிக்கையிலே அடியே
முழுவதுமாய் அலர்ந்த கமலம் நான்தான் என்கிறதே
உந்தன் பொல்லாத விஷமச்சிரிப்பு முல்லைப்பற்களில்
காதல் பொங்கி சிலிர்க்க சிரிக்க
படமெடுத்த அரவத்தின் தலைபோல்
உந்தன் பின்னழகு , அதன்மேல் வந்து
அலைமோதியயதே உந்தன் ஆறடி
விரிந்த கார்க் கூந்தல்; உந்தன் நடை அழகில்
தன்னை மறந்த அன்னமிரண்டு , அங்கு
தன் நடையையும் மறந்து உந்தன் நடையைப்
பயில்வதைக் கண்டேனே களிப்புறவே நான்
மயிலே உன் நடைக்கு ஜாதி சேர்ந்ததே
உந்தன் கால்களின் சலங்கை இசை ஓசையும்
தந்து பாரதமாய் உன்னையே என்முன் நிறுத்தி.