யார் நீ
யார் நீ?
நேற்றுவரை முகம் தெரியாத முகவரியா...
இன்றுமுதல் என் அத்தனை கவிதைக்கும் நீயே முதல் வரியா...
உன்னை சேராதவரை
உடலைவிட்டு உயிரும் இனி தனியா...
யார் நீ?
தேய்பிறையில் முழுநிலவா நீ - நான்
தேடாதவாரு ஒளிந்துகிடப்பவளா நீ?
தேன்மழையின் திகட்டலா நீ - அழகு
தேவதையின் பிம்பமானவளா நீ?...
வேதங்களின் மொழிபெயர்பா நீ - என்
வேண்டுதல்களில் நிறைந்திருப்பவளா நீ?
வேற்றுமையின் ஒற்றுமையா நீ - இரு
வேல்விழிகளாலே வதைப்பவளா நீ?...
வைரமுத்துவின் கவிதையா நீ - என்
வைரநெஞ்சத்தில் ஒளிவீசுபவளா நீ?
வைகறையின் துயலா நீ - காதல்
வைத்தியத்தில் கைதேர்ந்தவளா நீ?...
முந்தானைமுகிலின் முதல்மழையா நீ - என்
முணங்கலும் தங்கிபோனவளா நீ?
முத்தத்தின் சத்தமா நீ - என்
முடிவுகளுக்கு ஆரம்பமானவளா நீ?...
போகாதஊரின் வழித்தடமா நீ - மன
போர்களத்தில் பூப்பறித்தவளா நீ?
போலியான மெய்யா நீ - எனை
போதனைசெய்தே மயக்கத்தெரிந்தவளா நீ?...
யார் நீ? யார் நீ?
ஒருவேளை
அர்த்தமற்ற என் கவிக்கு
உயிரளித்தவளா நீ?
எது எப்படியோ
முற்றுப்புள்ளி வைக்காமலேயே முடிக்கிறேன்
கேள்வியோடே நீ எனை தொடர...
#கவிதை_கற்பனை_மட்டுமே
@ஸ்ரீதேவி