நான் நீயென்ற போதும்

ஆண்:
கனவிலும், நனவிலும்
உந்தன் நினைவின் தாகம்
பெண்:
எதிரிலும், எதிலிலும்
உந்தன் விழியின் மோகம்
ஆ:
இதழ்கள் பூட்டும் மௌனத்திலே,
கோடி ஆசைகள் புரியலையா?
பெ:
புரிந்து கொள்ளும் சமயத்திலே,
விடுப்பு எடுக்க வழியில்லையா?
ஆ:
உயிரின் தேடல்
உன்னிடம் முடியும்,
முடியும் பொழுது -பல
இரவுகளும் விடியும்...

ஆ:
கண் விழித்திடும் நேரம்,
என் கனவுகளும் நீளும்,
தள்ளி நீயும் போகின்ற தூரம்,
தாங்காதே என் நெஞ்சின் ஓரம்...
பெ:
நான் நீயென்ற போதும்,
வான் நிலமாய் மாறும்,
உதடுகள் நெருங்காத என் காதும்,
ரகசியத்தை வேண்டியே உனைதேடும்
ஆ:
தேடல்கள் முடியுமா?
மனம் தேடியே தொலையட்டுமே
பெ:
அட!
தொலைந்தது போதும்- நீ
தொலைவிலிருந்தாலும்,
தொல்லைகள் கரைவதில்லை...

பெ:
உன் கோடையின் குளிரில்,
என் பனித்துளி வேகிறதே!
நம் காலங்களை காதலே
ஆட்சிசெய்வதினால்...
ஆ:
உன் தடயங்கள் எல்லாம்,
என் தனிமையின் இருப்பிடமா?
என் தவிப்புகளை உன்மனம்
இன்னும் அறியலையா?
பெ:
காதலே அறியலாம்-ஆனா
காதலி அறிவதில்லை
ஆ:
அடி!
அறியும் சமயத்தில்
அறிவுரை கூறி
அடக்குவதில் நியாயமில்லை...

#கவிதை_கற்பனை_மட்டுமே
@ஸ்ரீதேவி

எழுதியவர் : ஸ்ரீதேவி (28-Jan-18, 10:47 pm)
பார்வை : 678

மேலே