கனவிலேனும் உன்னோடு

வெரும்கைகளால்
வாளில்லாமல்
போராட முடியவில்லை
உன்னோடும் உணர்வுகளோடும்!
காமம் கொண்ட காதலுக்கும்
காதல் நுகரும் காமத்திற்க்கும்
எரிமலையில் நிழலில்
ஊஞ்சலாடும்
ஓர் மலரின் தாபங்களே
நிதர்சனம்!
நீ எனக்கில்லை
என்கிற யதார்த்தங்கள்
புரியாமலில்லை...
கனவுகளை தழுவிக்கொண்டு
உறக்கத்திலேனும்
வாழ்ந்து கொள்கிறேனே
உன்னோடு.....!

எழுதியவர் : சுரேஷ் குமார் (28-Jan-18, 10:33 pm)
பார்வை : 276

மேலே