முகமூடிக்குள் அவள்
“ ஆள் பார்த்து ...ஆள் பார்த்து ...
நீ அணியும் முகமூடி ...
நாள் பார்த்து வந்ததா ...?
இல்லை ....
நான் பார்த்ததால் வந்ததா....?
சித்திரத்தை பார்க்காத ...
நாளும் தான் எனக்கில்லை ...
சிங்கார சிரிப்பைத்தான் ..
காணாமல் தொலைவதில்லை ...
சொல்லாமல் வருவதில்லை ...
சொல்லித்தான் போவதில்லை ...
நீயும் தான் அருகே வந்தால் ...
எமக்கில்லை ஒருத்தொல்லை ...
நெத்தியிலே சிகப்பு நிலா ...
நீ சுமந்தா... வீதி ..விழா ....
கண்சிமிட்டும் பார்வையிலே ...
மன காயமெல்லாம் ஆறும் நல்லா....!
கருப்பு வானவில்லாய்...
புருவத்தை உயர்த்தையிலே ...
எச்சரிக்கும் அழகு கண்டு ...
எட்டி குதிக்கும் இதயமும்தான் ...
எங்கெங்கோ ஓடுதம்மா ...!
உள்ளுக்குள் கவி பாடுதம்மா...!
தண்ணியில்லா பாறையிலே ..
தவித்துதான் நிக்கையிலே...
அல்லி அள்ளி போனதுதான்..
தண்ணியென்று தான் நினைத்தேன் ..
அருந்தியபின் தான் அறிந்தேன் ...
அமுதமென்று தான் வியந்தேன் ...
முழுமை பெறா கவிதைகளும் ..
முணங்கித்தான் போனதடி ..
உன்னழகை சொல்லிவிட ...
ஒருமொழிதான் போதலடி ... ”