கண்ணன் ம - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கண்ணன் ம |
இடம் | : ஆத்தூர் , திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 04-Nov-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 938 |
புள்ளி | : 126 |
சிறகுகள் விற்பனைக்கு அல்ல ...
“ ஆள் பார்த்து ...ஆள் பார்த்து ...
நீ அணியும் முகமூடி ...
நாள் பார்த்து வந்ததா ...?
இல்லை ....
நான் பார்த்ததால் வந்ததா....?
சித்திரத்தை பார்க்காத ...
நாளும் தான் எனக்கில்லை ...
சிங்கார சிரிப்பைத்தான் ..
காணாமல் தொலைவதில்லை ...
சொல்லாமல் வருவதில்லை ...
சொல்லித்தான் போவதில்லை ...
நீயும் தான் அருகே வந்தால் ...
எமக்கில்லை ஒருத்தொல்லை ...
நெத்தியிலே சிகப்பு நிலா ...
நீ சுமந்தா... வீதி ..விழா ....
கண்சிமிட்டும் பார்வையிலே ...
மன காயமெல்லாம் ஆறும் நல்லா....!
கருப்பு வானவில்லாய்...
புருவத்தை உயர்த்தையிலே ...
எச்சரிக்கும் அழகு கண்டு ...
எட்டி குதிக்கும் இதயமும்தான் ...
எங்க
பன்முகம்கொண்டதொரு கார்பொரேட்க் காரணையெதிர்க்க
தனித்தனிமுகம்கொண்டதொரு பத்து கார்போராட்க்காரன் ஒண்ணாகிறான்..
எப்போதும் நடக்கும் முதலாளிச் சண்டையில் ...
யார்செயித்தாலும் உருளப்போவதென்னவோ ஏழைகளின் மண்டைதான் ....
--
பல ஜாலியில் வாழும் பதவிப் பைத்தியங்களுக்கிடையே
வலியையே வழியாய் சுமந்துவாழும் எம்மக்களே...
உண்மையான பலசாலி ...!!!!
இதழில்
சரி ..
கன்னத்திலுமா ...?
தேனெடுக்கும் முயற்சியில்
பட்டாம்பூச்சி
முக்கனியோ
எக்கனியோ
எமக்கொன்றும் வேண்டாம் ...
கணி னி ( கனி - நீ )
இருந்தால் போதும் ....!
எம்பொழுதெல்லாம்
வாழும் ...!
தொலைந்ததை ...
தேடினேன்...
இன்னொன்று தொலைந்தது...
இரண்டையும் சேர்த்து தேடினேன் ...
மற்றோன்றும் தொலைந்தது ...
தேடுவதை நிறுத்திவிட்டு...
கண்ணாடியை பார்த்து கொண்டேன் ...
அப்பாடா ...
நான் இருக்கேன் ....
இருப்பவன் ...
உண்ணும் ...
ஐந்து நட்சத்திர ஹோட்டல் ...
இல்லாதவன் ...
உண்ணும் ...
வான் நட்சத்திர ஹோட்டலின் முன் ...
தோற்றுப்போய்விடுகிறது ...
" இரவு நேர திறந்தவெளி....
நடை பாதை கடை "
பல ...
கெடுதல்களுக்கு நடந்தது ...
ஒரே ஒரு ...
நல்லதுக்கு நடக்கவில்லை ...
" சந்திப்பு "
ராமர் கடவுளென ...
தமிழக ...
குழந்தைகளை நம்பவைக்க...
பலிகடாவானது ...
" ஒன்னும் அறியா ...வேலி ஓணான்கள் "
( ஓணானிடம் ராமர் தண்ணீர் கேட்டதாகவும் ...அதற்க்கு ஓணான் மூத்திரத்தை தந்ததாகவும் ... ஒரு புனையப்பட்ட கதை கிராமத்து சிறுவர்களிடம் பரப்ப பட்டு வந்தது ... அதன் விளைவு ...கடவுள் ராமர் என ஒப்புக்கொண்டு ...ஓணானை கல்லெறிந்து கொல்வதை பொழுது போக்காய் செய்து வருகின்றனர் ....)
கை கால்முளைத்த போது ...
சிற்பமாகவும் ...
கண்முளைத்த பின்
தேவதையாகவும் மாறியது ...
!...கல் ...!
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."
அன்பால் ...
புட்டிப்பாலை ...
தாய்ப்பாலாக்கிய ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."
நிமிந்த மார்பை சுருக்கி ...
தாய் மடிக்கு இணையாய்...
தோள்மடியில் சுமந்த...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."
வந்த நகசுத்தியை...
பலமுறை சுத்தி ...
காயத்தை மாயமாக்கிய ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."
விழும் நிழல் ...
சுவற்றில் மோதுவதை பார்த்து ...
பதறி எழுந்து துடித்த ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."
எதை கேட்டாலும் ...
முடியாது எனும் வார்த்தையை ...
முகத்திற்கு பின் கூட ...
சொல்லாத...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."
அடித்த
மூன்று முழம்
மல்லிகை கேட்போருக்கு
முக்கால் முழம்
புன்னகையும் சேர்த்து கட்டுகிறாள்
பூக்கடையில் ஓர் இளவரசி.
வேடமில்லா புன்னகைக்கு
விலை தர இயலாமல்
கடன் சொல்லி போகின்றனர்
வாடிக்கையாளர் யாவரும்.
பூக்கள் வாங்கினால்
புன்னகை இலவசமோ?
புருவம் சுருக்கி
இல்லையென்று தலையசைத்து
ஏதோ நினைத்தவளாய்
மீண்டும் சிரிக்கின்றாள்.
பையில் காசின்றி
உதடுகளில் குறுநகையுடன்
அவளை கடந்து போகின்றேன்.