என் அப்பா எனக்கு அம்மா

" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

அன்பால் ...
புட்டிப்பாலை ...
தாய்ப்பாலாக்கிய ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

நிமிந்த மார்பை சுருக்கி ...
தாய் மடிக்கு இணையாய்...
தோள்மடியில் சுமந்த...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

வந்த நகசுத்தியை...
பலமுறை சுத்தி ...
காயத்தை மாயமாக்கிய ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

விழும் நிழல் ...
சுவற்றில் மோதுவதை பார்த்து ...
பதறி எழுந்து துடித்த ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

எதை கேட்டாலும் ...
முடியாது எனும் வார்த்தையை ...
முகத்திற்கு பின் கூட ...
சொல்லாத...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

அடித்து பயம் விதைத்த...
ஆசிரியரை ...
முறைத்து பார்த்தே ...
பயத்தை அறுவடைசெய்த ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

உறுபடாதுயெனும் ....
ஊராரின் வார்த்தையை ...
ஒருபோதும் ...
காதில் போடாமல்...
சிரிப்போடு பார்க்கும் ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."


தம் கவலைகளை ...
கண்ணிலோ ..இதழிலோ ..
என்முன்...
காட்டாமல் மறைக்க...
சோகத்தை வேகமாய் முழுங்கிய
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

அப்பா ...
அம்மாவாகையில் ...
ஆண்டவன் ...
நமக்கு தேவைப்படுவதில்லை ...!

எழுதியவர் : ம.கண்ணன் (30-Jan-18, 9:23 pm)
பார்வை : 1143

மேலே