தாய்மைக்கு வாழ்த்துகள்---கட்டளைக் கலிப்பா

கட்டளைக் கலிப்பா :
பொன்னிற் றோய்ந்தொளி பூங்கமழ் வீசியே
=====பூக்குஞ் செம்மரை போலெழிற் பொன்மரை
கன்னற் பொங்குளம் பெற்றறம் நிற்பதிற்
=====காக்கும் மாற்றேவி தோற்றமாய்க் கண்வரும்
நின்னிற் றோன்றவே கார்முகிற் றேன்மழை
=====நெஞ்சில் வார்க்குதே யாழ்மொழி பேசியே
அன்றிற் கூட்டினுள் ஈருயிர் வாழ்ந்திட
=====வன்பில் ஈன்றவள் இன்னுயிர் வாழ்த்துதே...
வாய்ப்பாடு :
தேமா கூவிளம் கூவிளம் கூவிளம்