தமிழ் பித்தன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் பித்தன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jan-2018
பார்த்தவர்கள்:  392
புள்ளி:  32

என் படைப்புகள்
தமிழ் பித்தன் செய்திகள்
தமிழ் பித்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2018 9:33 pm

“நனவென ஒன்றுஇல்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்”

இந்நாட்களில் அக்கனவு தினம் தினம் என்னை தேடி வருகின்றது. இது கனவல்ல என்று சில சமயங்களில் தோன்றுவதுண்டு. நான் துயில் பயின்று சில நொடிகளில் அக்கனவு வந்துவிடுகின்றது.

கனவில் இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே. தேவதை ஒன்றும், நானும். தேவதை என்பது அஃறிணையா அல்லது பெண்பாலா? என்ற கேள்விக்கு என்னுள் தெளிவான விடைகள் ஏதுமில்லை. என் கனவுகளில் தேவதையை பெண்பால் என்றே கருதுவோம். பூட்டிய அறைகளுக்குள் இவள் எவ்வாறு வந்திறங்கக்கூடும்? அவள் வருகையிலோ, வெளி செல்கையிலோ நான் கண்டதில்லை. வானத்தில் இருந்து இப்பொழுது தான் இறங்கி வந்தது போன்ற ஒரு வனப்பு.

எனத

மேலும்

தமிழ் பித்தன் - தமிழ் பித்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2018 9:00 am

"கொக்கே கொக்கே வெள்ள போடு,
கொழுந்து கொக்கே வெள்ள போடு"

இவ்வரிகளை உரக்க பாடிக்கொண்டே, தெற்கு நோக்கி நான் ஓடிக்கொண்டிருந்தேன், பதின்வயது சிறுவனாக. வானிலே உயரத்தில் கொக்குகள் கூட்டமொன்று அருகில் இருக்கும் வாய்க்காலை நோக்கி பறந்து கொண்டிருந்தன. எனது இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி கொக்குகளை என்னை நோக்கி அழைப்பது போல அசைத்துக்கொண்டிருந்தேன். என்னோடு ஓடி வந்த நண்பர்கள் யாவரும் பாதியிலேயே நின்று விட்டிருந்தனர். "டேய் அங்க போகாதே டா, அம்மா கிட்ட சொல்லிடுவேன்" என்று ஒலித்த தமக்கையின் குரல் என் பின்னே காற்றில் எங்கோ தொலைந்தது.

தட்டான்கள் தன்னை தான் பிடிக்க வருகிறானோ என்றஞ்சி கலைந்து ஓடின. தட

மேலும்

எழுதியது தங்கள் தான் என்றால் உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். இன்னும் இதோபோன்ற பதிப்புகளை எதிர்பார்க்கிறேன் 07-Apr-2018 10:58 am
எழுதியது நானே. நன்றி தோழர். 06-Apr-2018 11:06 pm
இதை எழுதியது யார்ரென்று தெரியவில்லை..... அவருக்கு என் கோடி கும்பிட்டு. பகிர்ந்த உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நல்ல கதை. கடந்த காலத்தை சில மணித்துளிகளில் கண்முன் காட்டி சென்றது. கொக்கை துரத்தி வெள்ளை கேட்டவர்களில் நானும் உண்டு என்பதை நினைக்கும்போதே வலியோடு கூடிய மகிழ்ச்சி எட்டிப்பார்க்கிறது. (காதல் தோல்வி போலவா என்று கேட்காதீர்கள்; இது அதைவிட கடினமான வலி இன்பம்.) இப்பொழுது கொக்கு போட்ட வெள்ளை நகக்கண்ணில் இல்லையென்றாலும் நினைவுக்கண்களில் வந்து போகிறது. படைத்தமைக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி. ""கொக்கே கொக்கே வெள்ள போடு, கொழுந்து கொக்கே வெள்ள போடு" 22-Mar-2018 1:58 pm

26-Feb-2018 8:20 am

இன்று நடந்தவை யாவும் உனக்கு கடிதத்தில் எழுத வேண்டுமென என மாலை முதல் மனதிலே அனல் ஒன்று ஒளிர்ந்துகொண்டிருந்தது.

படுக்கையினை விட்டு எழுந்திருக்க தாமதம் ஆனதால், இன்றும் நான் சவரம் செய்துகொள்ளவில்லை. முள் எனும் உவமையை மறந்து, புதர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன முகத்தில் உரோமங்கள். கண்ணாடி சாளரத்தில் விழுந்த எனது படிமம், இது உண்மையில் நான் தானா எனும் அய்யத்தை மனதில் விதைத்துச் சென்றது. மஞ்சள் ஊறி மங்கிப்போன கண்ணாடியின் தேகங்கள் அந்த அய்யத்தை மேலும் வலுப்பெறச் செய்தன. நேற்றிரவு பெய்த மழையின் மிச்சமாய், சாளரத்தின் வெளிப்புறம் ஒட்டியிருந்த மழைத்துளிகள் ஏனோ, உந்தன் கன்னத்து பருக்களை நெஞ்சில் நிறுத்

மேலும்

தமிழ் பித்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2018 2:26 am

வீடுகள் இடிந்து விழும் ஓசைகள் கேட்டுள்ளீர்களா? வாடகை வீடுகளில் வசிப்போர், ஒவ்வொரு வீட்டை விட்டு பிரியும்பொழுதும், வீடுகள் கதறி அழுவதை கேட்டுள்ளீர்களா?

வீடுகள் மனித வாழ்வின் பெரும் அங்கமாக இருக்கின்றன. வீடுகளுக்கு உணர்ச்சிகள் உண்டு என்பது மிகைச்சொல் அன்று. நமது எண்ண ஓட்டங்களை அவை எளிதாக புரிந்து கொள்கின்றன. மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்திருக்கையில் நம்மோடு சேர்ந்து நடனங்கள் ஆடிடும் சுவர்களின் முகங்களின் வழிந்தோடும் பொலிவு பெரும் அழகு. மறுபுறம், கடின காலங்களில் நம் கண்ணீரைத் துடைத்திட கரங்கள் இல்லாத காரணத்தினால், நம் அருகில் அமர்ந்து செய்வதறியாமல் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. எதுவா

மேலும்

தமிழ் பித்தன் - தமிழ் பித்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2018 9:48 am

பக்கத்துக்கு அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் நண்பனின் குறட்டை சத்தம் காதுகளில் எதையோ சொல்லிச் சென்றது. கவிதையா, கர்ஜனையா? என்னால் பிரித்தறிய இயலவில்லை. கண்விழித்து பார்த்தேன். இது எந்த இடம்? எதிரில் இருந்த இருட்டு கண்களுக்கு பழகிட சில நிமிடங்கள் பிடித்தது.

சாலைகள் முடிவதில்லை என யார் சொன்னது? விழித்து பார்க்கையில், இங்கே நான் ஒரு சாலையின் முடிவில் நின்றுகொண்டிருக்கிறேன். பின்னே, இரண்டடி தொலைவில் நிற்கும் தெருவிளக்கின் வெளிச்சம், நான் நிற்கும் இந்த கோட்டுடன் முடிந்துபோகின்றது. இதுவரை என்னை துரத்தி வந்த நாய்குட்டி, பாதை முடிந்தபடியினால் திரும்பி போக எத்தனிக்கின்றது. எதிரே வான், பூமி வேறுபாடு

மேலும்

நன்றி தோழர்.. 14-Feb-2018 1:06 am
நன்றி தோழர்.. 14-Feb-2018 1:06 am
எண்ணங்கள் என்பது ஒரு கோட்டில் தொடங்கி இன்னுமொரு கூட்டில் முடிந்து போவதில்லை. வட்டத்திற்குள் வைக்கப்படும் புள்ளிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு வர முடிவதில்லை அது போல் தான் வாழ்க்கையிலும் பல நிர்ப்பந்தங்கள் எம்மை கடந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் நடுவில் நிகழ்காலமாய் தன்னைத்தானே ஏதோ ஒரு வகையில் ஆராய பாடம் நடாத்துகின்றது விடியலை காணும் முன் இருளை மட்டும் வெளிச்சமாய் நம்பி இருந்த கண்களுக்கு வானமும் கையளவு தான் உள்ளமும் கடலளவு தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2018 11:58 pm
ஒரு குழப்பமான கற்பனையான கனவு உலகிற்கு சென்ற உணர்வு; உங்களின் இந்த பதிவை படிக்கும்போது.... ஆதிகால மனிதன், கற்களை உரசிடாமல், உலகெங்கும் இருள் மட்டுமே நீடித்து இருந்திருக்குமாயின்.. ? இந்த ஒரு கேள்வியில் பலவினாக்களையும் நாம் எண்ணாத பல கற்பனைகளையும் தூவி செல்கிறது.. அருமையான பதிவு 13-Feb-2018 5:24 pm
தமிழ் பித்தன் - தமிழ் பித்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2018 9:42 am

இருளில் மறையும்
களிராய் நான் தொலைகையில்,
முழங்காலிட்டு
மூன்று புள்ளியிட்டு
மங்கை வரைந்திடும்
பூக்கோலத்தின்
வாசத்தில் விடிகின்றன - எந்தன்
புலரிகள்.

மேலும்

அருமை 07-Feb-2018 5:47 am
நன்றி தோழர். 29-Jan-2018 10:03 pm
அருமை நட்பே... 29-Jan-2018 9:54 pm
நன்றி தோழர். 29-Jan-2018 8:35 pm
தமிழ் பித்தன் - தமிழ் பித்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2018 9:44 am

என்றும் தீர்ந்திடா
தனிமையின் உரையாடலில்-

சுவர்களை இடித்து
சுதந்திர பறவையாய்
சிறகை விரித்திட
சிறு ஆசை துளிர்ந்திட.

வானிலே எங்கோ
வானிழல் ஒன்று
வன்மங் கொண்டொலித்தது

அகம் மறை மானுடா - உன்னுள்
அருகதை என்னவோ?
பறவைகள் பாபமன்றோ?

ஏதுமின்மையால்
எதிர்மறை ஒன்றே
மிஞ்சியது.

சுவர்களின் நடுவே
மீண்டும் எனை நானே
சிறை கொண்டேன்.

மேலும்

நன்றி தோழர். 29-Jan-2018 8:31 pm
கூண்டுக்குள் சிறைப்பட்ட பறவைகள் போல கையளவு இதயத்தில் கடலளவான காதல் சிறைப்பட்டுக் கிடக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 7:59 pm
தமிழ் பித்தன் - தமிழ் பித்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2018 9:06 am

எனக்கு ஆறு வயது. பள்ளியில் சேர்ந்து ஒரு மாதமே முழுமையடைந்திருந்தது. அப்பா டீச்சரிடம் என்ன சொல்லி அனுமதி வாங்கினார் என்று தெரியவில்லை. மதியமே என்னை பள்ளியிலிருந்து கூட்டிப்போய், புது கால்சட்டையும், மேல் சட்டையும் அப்பா வாங்கி தந்தார். சைக்கிளில் ஏறி, வீட்டுக்கு திரும்புகையில், கதிரவன் மேற்கே ஒழிய ஓடிக்கொண்டிருந்தான்.

அப்பாவின் சைக்கிளில் பின்புறம் நான் அமர்ந்திருந்தேன். விமானம் வரை ஏறி பறந்த பின்னும், அப்பாவின் சைக்கிளை போன்ற பாதுகாப்பான பயணம் ஏதுமில்லை. இதுவரையில் ஒரு நாள் கூட, சிறு கலக்கம் இருந்ததில்லை. சில நேரங்களில், நான், அண்ணன் மற்றும் அம்மா என மூவரையும் வைத்து ஓட்டி செல்வார். அப்பா எ

மேலும்

நன்றி தோழரே. 24-Jan-2018 8:57 pm
இதை படிக்கும் பொது சிலதுளி கண்ணீர் எட்டிப்பார்க்குது. " சிறுவயதில் அது வேண்டும் இதுவேண்டும்" என அடம்பிடிக்கும்போதெல்லாம் தன பொருளாதாரநிலையை சொல்ல முடியாமல் தவித்த அப்பா நினையும் வருகிறார். 24-Jan-2018 6:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
வாலி ரசிகன்

வாலி ரசிகன்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
மேலே