பூக்கடை இளவரசி

மூன்று முழம்
மல்லிகை கேட்போருக்கு
முக்கால் முழம்
புன்னகையும் சேர்த்து கட்டுகிறாள்
பூக்கடையில் ஓர் இளவரசி.

வேடமில்லா புன்னகைக்கு
விலை தர இயலாமல்
கடன் சொல்லி போகின்றனர்
வாடிக்கையாளர் யாவரும்.

பூக்கள் வாங்கினால்
புன்னகை இலவசமோ?

புருவம் சுருக்கி
இல்லையென்று தலையசைத்து
ஏதோ நினைத்தவளாய்
மீண்டும் சிரிக்கின்றாள்.

பையில் காசின்றி
உதடுகளில் குறுநகையுடன்
அவளை கடந்து போகின்றேன்.

எழுதியவர் : (29-Jan-18, 9:43 am)
Tanglish : pookkadai elavarasi
பார்வை : 424

மேலே