அப்துல் காதர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அப்துல் காதர் |
இடம் | : தமிழ் நாடு |
பிறந்த தேதி | : 30-Aug-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 161 |
புள்ளி | : 14 |
தமிழன்
கவி படிப்பதில் அலாதி விருப்பம்..
வேதியல் தந்த வேதனை
வேண்டாம் இனி ஒரு சோதனை
மருந்தாக வந்தால் மகிழ்ச்சி
மரணமாக வந்தால் அதிர்ச்சி
நெகிழியை உருவாக்கினான்
இயற்கையை மறந்தான்
செயற்கையை மணந்தான்
நஞ்சையை நஞ்சாக்கினான்
புஞ்சையை புண்ணாக்கினான்
ஆழியை அழித்தான்
மண்டலத்தை மாசுபடுத்தினான்
நெகிழி நெஞ்சை குறிவைத்தது
பிறந்தது ஞானம்
தடைசெய்தான் நெகிழியை
நெகிழியை நிராகரிப்போம்
இயற்கையை நெகிழவைப்போம்
நிறுத்துவோம் நெகிழியின் பயன்பாட்டை
நமக்காக அல்ல புதிய தலைமுறைக்காக
எனது வீட்டில் அம்மா பருப்பு வடை செய்வதற்காக தயாரித்து கொண்டு இருந்தாள்
அருகினில் நானும் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன் ..
வடை பருப்புக்கு பதிலாக வேற எதோ ஒரு பருப்பை ஊற வைத்து வைத்து இருந்தது ..
புதுசா எதோ இருக்கு என்று நானு மனசுக்குள்ள நெனைச்சு பேசாம இருந்தேன்
இப்பொழுது எல்லாம் ரெடி வடை சுட ஆரம்பிச்சுட்டாங்க ..
முதல்ல அம்மா சாப்பிட்டு பார்த்தாங்க
என்கிட்டே அம்மா சொன்னாங்க என்னமா எப்பொழுது போல
இல்லாம வித்தியாசமா இருக்குனு
நான் கேட்டேன் , அம்மா வடை பருப்புக்கு பதிலா வேற எதோ இருந்துச்சுனு
இல்ல இந்த பருப்புல வடை நல்லா இருக்கும்னு பக்கத்துக்கு
வீட்டு அக்கா சொல்லுச்
நினைவின் நிஜமே...!
பன்னீர்
ரோஜா
அழகே...!
பதுமைகள்
போற்றும்
எழிலே...!
பனியின்
குளுமை
சேர்த்து...
பழரசம்
வார்த்த
இதழே...!
பசுமை -
லயத்தில்
இனிய
பதங்கள்
சேர்க்கும்
படைப்பே...!
தளிரின்
இலைசீர்
கரத்தால்
தனியா
இன்பம்
தருந்தேன்
தருவே...!
மௌன
வெளியில்
மணத்தை
மகிழ்வாய்
விதைக்கும்
மொட்டே..!
போதை
தனக்கும்...
போதை
கொடுக்க...
பூத்த
விடியலின்
சொத்தே...!
அழகென
மெல்ல
அசைந்து
அசைந்து
ஆடிடும்
அதிசய
வரவே..!
முள்லென
வெல்லாம்...
நல்லனவாக
சில்லென
சிலிர்த்த
சிற்றிடை
வனமே...!
கனவின்
ஜரிகை
கலந்த..
இன்னும் இருப்பேன்
எதற்குப்பின்பும்...
நடுங்குமுன் உடலில்
நழுவி விழுகிறது
உனது தத்துவம்.
வெடி பொறுக்கி
கும்பலல்ல நான்.
எரிமலை அமிலம்.
துயில் கிழித்து
அலறவிடும் வன்கனவு.
எரிக்குமென் பார்வையில்
உன் கோட்டைச்சாம்பல்
பரிதவித்து திணறும்.
மமதையில் இளிக்கும்
உன் உளறல்கள்
ஒளியில் ஊடுருவும்
என் காலடியில் வரளும்.
பகல் கனவில்
ஊறிய எச்சிலுடன்
அலைவதல்ல என் போக்கு.
முட்டும் பூகம்பம்.
கூச்சலிட்டு தத்தும்
காக்கை கூட்டமல்ல நான்.
தனியே பறக்கும் பருந்து.
கடவுளைத் தேடி அலைஞ்சேனே
கால்கடுக்க நான் நடந்தேனே
கரு சுமந்தவ இங்கிருக்க
காசி இராமேஸ்வரம் போனேனே...
அன்னைய மிஞ்சிய தெய்வமில்லடா
அதை மறுத்திடும் யாரும் மனுசன் இல்லடா
பத்து மாசம் சுமந்துன்னை பெத்திடுவா
உன்ன பாத்தவுடனே பட்ட கஷ்டம் மறந்திடுவா
நிறமென்ன இனமென்ன பாக்கமாட்டா
நீ அழுவாய் என்று அவ தூங்கமாட்டா...
தாலாட்டு பாடி உன்ன தூங்க வைப்பா
தவறென்ன செஞ்சாலும் அத தடுக்கமாட்டா
அம்மானு கூப்பிட்டதும் வந்து அனைச்சுடுவா
ஆசைதீர முத்தமழை பொழிஞ்சுடுவா...
தாயைப் போல உறவு உலகில் இல்லையே
அத தைரியமா சொல்லிடுவேன் தயக்கம் இல்லையே...
கழு மரத்தில்
கயிற்றை கட்டி,
கழுகுகள் புடை சூழ,
ஒத்தை உயிராய்
உழலுகிறேன்..
என்னை பிரிந்து
தவிக்க வைத்தவளை,
என் உயிரை பிரித்து
தவிர்க்க நினைக்கிறேன்..
அவள் நினைவெனும் ஊஞ்சலிலிருந்து
தவறி விழுந்து,
மரண தொட்டிலில் வயோதிக கிழவனை போல கிடக்கிறேன்..
நான் இறப்பதற்காக கழுகுகளை விட,
நானே பேராசை கொள்கிறேன்....
பிணம் தின்னும் கழுகுகளை விட,
உன் நினைவுகள் என்னை உயிரோடு தின்று பெரும் ஏப்பம் விட்டு செல்கிறது...
.
தொலைவில் என்னை கண்டதும்
இமைகள் துடிப்பது ஏனோ?
நான் அருகில் வந்ததும்
உதடுகள் நடிப்பது ஏனோ?
இருளாயிருந்த என்வாழ்வில்
நிலவாய் வந்து ஒளிதந்தாய்,
காதல் வானில் தினம் பறந்தோம்
இணைபிரியா பறவையாய்,
பின்பு ஏன் பெண்னே
உன்னிதயத்திலிருந்து என்னை துறந்தாய்,
நீயில்லா என்னிதயத்தில் உயிர் சென்று அழுகிறதே ,
உன்னை நினைத்தே என்வாழ்வும் கடந்து செல்கிறதே,
வானவில்லை போன்று
சிலகணம் பிரகசிக்க வரவில்லை,
வண்ணமில்லா நிழலை போல
உன்னுடன் தொடரவே விரும்புகிறேன்,
காலம் நம்மை பிரித்தாலும்
காதல் சேர்க்கும் என்று நம்பிக்கையில்
நம்காதலுடன் காத்திருக்கிறேன் .............
சீரிய பூமி சிரியா இன்று
சீர் குலைந்து நிற்கிறதே!
வாணிபம் ஓங்கிய ஷாமில் என்றும் வான்மழை குண்டாய் பொழிகிறதே!
பச்சிளம் மழலைகள் தேகம் எங்கும் குறுதிக் குளமாய் ஆகிறதே!
பட்டினி பசியும் மட்டுமே இவர்கள் உடன் சேர்ந்தே வருகிறதே!!
ஐ.நா என்றொரு அயோக்கிய (சபை) முதலை கண்ணீர் வடிக்கறதே!
ஐயோ பாவம்! கேட்க கூட நாதி அற்று கிடக்கிறதே!!!
தன் ஊன் உருக்கி ஊட்டிய பிஞ்சுகள்
தன்முன் கருகி கிடக்கிறதே!
காக்கை குருவியின் ஒற்றுமை கூட
காக்க தவறி விட்டனரே
தன்னலம் மட்டுமே தாரக மந்திரம் என்றொரு அர(க்க)சியல் நடக்கிறதே!!! 🤐
கடல் அலையும் துள்ளி வரும் உன்,
உடல் அழகை கண்டுவர !
கார்மேகம் கூடிநிற்க்கும் உன்
கார்கூந்தல் கோதி விட!!
தேன் உண்டு மயங்கிய வண்டு உன் தேகம் கண்டு, வியந்தேன் இன்று!!!
நாவொன்று போதாது உன் நனிச்சிறப்பை கூறிடவே!!!!
நான்காம் விரலாய் ஒரு பன்மொழி பாவலன்!
விமர்சன கூர் ஆயுதம் என்றாலும், இவன் விகடகவியும் தான்...
ஈன்றெடுத்த என் அன்னை எங்கே?
தோல்கொடுத்த என் தந்தை
எங்கே?
நான் காண்பது என்ன கனவோ இல்லை என் காட்சி பிழையோ !
எங்கே செல்வேன், யாரிடம் சொல்வேன்??
தூக்கம் தொலைத்த என் விழிகள், துக்கம் மட்டுமே என் வலிகள்.
எங்கும் கேட்கும் மரண ஓலம் எங்கள்
சிரிய வீதியில் எந்த நாளும்.