பருந்து தனியே பறக்கும்

இன்னும் இருப்பேன்
எதற்குப்பின்பும்...
நடுங்குமுன் உடலில்
நழுவி விழுகிறது
உனது தத்துவம்.
வெடி பொறுக்கி
கும்பலல்ல நான்.
எரிமலை அமிலம்.
துயில் கிழித்து
அலறவிடும் வன்கனவு.
எரிக்குமென் பார்வையில்
உன் கோட்டைச்சாம்பல்
பரிதவித்து திணறும்.
மமதையில் இளிக்கும்
உன் உளறல்கள்
ஒளியில் ஊடுருவும்
என் காலடியில் வரளும்.
பகல் கனவில்
ஊறிய எச்சிலுடன்
அலைவதல்ல என் போக்கு.
முட்டும் பூகம்பம்.
கூச்சலிட்டு தத்தும்
காக்கை கூட்டமல்ல நான்.
தனியே பறக்கும் பருந்து.

எழுதியவர் : ஸ்பரிசன் (15-Mar-18, 3:50 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 150

மேலே