பருப்பு வடை

எனது வீட்டில் அம்மா பருப்பு வடை செய்வதற்காக தயாரித்து கொண்டு இருந்தாள்
அருகினில் நானும் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன் ..
வடை பருப்புக்கு பதிலாக வேற எதோ ஒரு பருப்பை ஊற வைத்து வைத்து இருந்தது ..
புதுசா எதோ இருக்கு என்று நானு மனசுக்குள்ள நெனைச்சு பேசாம இருந்தேன்

இப்பொழுது எல்லாம் ரெடி வடை சுட ஆரம்பிச்சுட்டாங்க ..
முதல்ல அம்மா சாப்பிட்டு பார்த்தாங்க
என்கிட்டே அம்மா சொன்னாங்க என்னமா எப்பொழுது போல
இல்லாம வித்தியாசமா இருக்குனு

நான் கேட்டேன் , அம்மா வடை பருப்புக்கு பதிலா வேற எதோ இருந்துச்சுனு
இல்ல இந்த பருப்புல வடை நல்லா இருக்கும்னு பக்கத்துக்கு
வீட்டு அக்கா சொல்லுச்சுனு
துவரம்பருப்பானு கேட்டேன் ..இல்ல மைசூர் பருப்புனு சொன்னாங்க ..

அதுக்கு நா சொன்னேன் , அட என்னமா நீங்க நம்ம ஊரு பருப்புல வடை சுடாம
மைசூர் பருப்புல பண்றிங்கனு .. இப்படியா பண்ணுவீங்க னு கேட்டேன்

அம்மா , என்ன ஒரு மாதிரியா பாத்துட்டு போ போயி வேலைய பாரு னு சொல்லி அனுப்பிட்டாங்க

மொக்க காமெடியா இருந்தாலும் வீட்ல எல்லாரும் சிரிச்சாங்க ..

எழுதியவர் : Roja (19-Mar-18, 1:28 pm)
Tanglish : parupu vadai
பார்வை : 406

சிறந்த நகைச்சுவைகள்

மேலே