கிடைக்காத செந்தூரா

அது செந்தூர மாம்பழ தோப்பு
பூவும் காயுமாய் மாமரங்கள்
அதன் கீழ் இருவர் ஒருவர் இளைஞர்
உரக்க "செந்தூரா ......செந்தூரா ..
என்றழைக்க, வழிப்போக்கர் சிலர்
அங்குவந்து அந்த மூத்தவரிடம்
" இன்னும் தோப்பில் செந்தூரா
காய்வாட்டிலே இருக்க இவர் என்
செந்தூரா என்று கூவி அழைக்கிறார்!
என்று கேட்ட்க அவர் சொன்னார்,
" ஐயா, வாஸ்தவம் இது எங்கள் தோப்பு
செந்தூரத் தோப்பு ஆனால் இவன்
என் மகன் தன அத்தைமகள் 'செந்தூரா'
இவனை மணக்காமல் வேறொருவனை
மணம் செய்துகொண்டதால்,அதிர்ச்சியில்
இப்படி தோப்பில் வந்து "செந்தூரா......என்று
சிறுது நேரம் புலம்பிவிட்டு சென்றிடுவான்
இரு வருடங்களாய்..... என்றாரே பார்ப்போம் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Mar-18, 6:59 am)
பார்வை : 149

சிறந்த நகைச்சுவைகள்

மேலே