சில்லாறா - பாலாறு மாதிரியா
ஏன்டி பொன்னி, அந்தத் தொலைக் காட்சிப் பெட்டில ஒரு பொண்ணு அழகாத் தெரிறாளே அவ யாருடி?
😊😊😊😊😊😊
அவுங்க ஒரு இந்தி நடிகை பாட்டிம்மா.
😊😊😊😊😊
அவ பேரு என்னடி?
😊😊😊😊
அவுங்க பேரு மனுஷி சில்லார்.
😊😊😊😊😊😊
அடக் கடவுளே மனுசின்னுகூடவா பேரு வச்சுக்கறது?
😊😊😊😊
பாட்டிம்மா 'மனுசி ' - இல்ல. 'மனுஷி' - நீங்க என்ன செய்வீங்க பாவம். உங்களால இந்திப் பேருங்கள உச்சரிக்க முடியாது.
😊😊😊😊😊
அது சரி. மனுசின்னா மனுசிதானா இல்ல வேற அர்த்தம் இருக்குதா?
😊😊😊😊😊
பாட்டிம்மா இது இந்திச் சொல். இந்தில 'மனுஷி' - ன்னா செல்வத்துக்கான கடவுள்
'லட்சுமி'யக் குறிக்குது.
😊😊😊😊😊
ஓ....'லட்சு'மியா? அப்பறம் அந்தப் பேருகூட என்னமோ ஆறுன்னு சொன்னயே அது என்ன ஆறுடி பாலாறா, பெரியாறா?
😊😊😊😊😊
சில்லார், பாட்டிம்மா.
😊😊😊😊
சில்லாறா? அந்தப் பேருல தமிழ்நாட்டில எந்த ஆறும் ஓடலியே. அது எங்கடி ஓடுது? அந்த ஆத்துத் தண்ணி சில்லுனு இருக்குமா?
😊😊😊😊😊
அது ஆத்துப் பேரு இல்லீங்க பாட்டிம்மா. இங்க எப்பிடி ஒரு சாதில உட்பிரிவு இருக்குது. அது மாதிரி வட இந்தியாவில இருக்கற 'ஜாட்' வகுப்பில் உள்ள உட்பிரிவு.
😊😊😊😊
நீயேன்னமோ வகுப்புன்ற உப்பிரிவுன்னு சொல்லற. எனக்கு எதுவும் புரீலடி பொன்னி.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ Chhillar -Surname in Jat community.
Manushi = Goddess Laxmi
■■■■■■■■■◆■■■■■■■◆■■■■■■◆■■■◆
சிரிக்க அல்ல. சிந்திக்க.