நினைவே தண்டனை
கழு மரத்தில்
கயிற்றை கட்டி,
கழுகுகள் புடை சூழ,
ஒத்தை உயிராய்
உழலுகிறேன்..
என்னை பிரிந்து
தவிக்க வைத்தவளை,
என் உயிரை பிரித்து
தவிர்க்க நினைக்கிறேன்..
அவள் நினைவெனும் ஊஞ்சலிலிருந்து
தவறி விழுந்து,
மரண தொட்டிலில் வயோதிக கிழவனை போல கிடக்கிறேன்..
நான் இறப்பதற்காக கழுகுகளை விட,
நானே பேராசை கொள்கிறேன்....
பிணம் தின்னும் கழுகுகளை விட,
உன் நினைவுகள் என்னை உயிரோடு தின்று பெரும் ஏப்பம் விட்டு செல்கிறது...
.