மறு பிறவி

எத்தனை தடவை மன்றாடிக் கேட்டும்
என் வார்த்தைகளுக்கு வசப்படாமல்
கட்டாக் காலி மந்தையாய் வந்து
என் நெஞ்சைத் துவம்சம் செய்கின்றன உன் நினைவுகள்
ஏகாந்தக் கொதிப்பில் நித்திரையைத்
தொலைத்துத் தவிக்கின்றன என் இரவுகள்

நான் இப்போதே இறக்கவும்
உன் காதுகளில் வந்தமர்ந்து உன்னைக்
கெட்டியாகப் பிடித்துக் கொள்ள
இன்னொரு பிறவி எடுத்துப் பிறக்கவும்
எனக்குப் பூரண சம்மதம்
உன் காதுகளை அலங்கரிக்கும் அந்தக் கம்மல்களை
கொஞ்சம் இறங்கி இருக்கச் சொல்லேன்!
உன் ஸ்பர்ஷம் பட்டு போதை மயக்கத்தில் கிறங்கி
கிடைக்கும் அவை இதற்குச் சம்மதிக்குமா ?
எனக்கு எந்தப் பிடியும் கிட்டவில்லை
ஆனாலும் ஒரு நப்பாசை தான்
நம்பிக்கை தானே வாழ்க்கை ?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (12-Mar-18, 5:29 pm)
Tanglish : maru piravi
பார்வை : 201

மேலே