அன்னையே தெய்வமடா 💗
கடவுளைத் தேடி அலைஞ்சேனே
கால்கடுக்க நான் நடந்தேனே
கரு சுமந்தவ இங்கிருக்க
காசி இராமேஸ்வரம் போனேனே...
அன்னைய மிஞ்சிய தெய்வமில்லடா
அதை மறுத்திடும் யாரும் மனுசன் இல்லடா
பத்து மாசம் சுமந்துன்னை பெத்திடுவா
உன்ன பாத்தவுடனே பட்ட கஷ்டம் மறந்திடுவா
நிறமென்ன இனமென்ன பாக்கமாட்டா
நீ அழுவாய் என்று அவ தூங்கமாட்டா...
தாலாட்டு பாடி உன்ன தூங்க வைப்பா
தவறென்ன செஞ்சாலும் அத தடுக்கமாட்டா
அம்மானு கூப்பிட்டதும் வந்து அனைச்சுடுவா
ஆசைதீர முத்தமழை பொழிஞ்சுடுவா...
தாயைப் போல உறவு உலகில் இல்லையே
அத தைரியமா சொல்லிடுவேன் தயக்கம் இல்லையே...