தாய்மையின் வலி
உன் அழுகுரல் கேட்டே
கண் விழித்தேன்
பாசத்துடன் பல் இளித்தார்கள்
பின்
பகையை மட்டுமே வளர்த்தார்கள் .
என்றும் உன்னை காண இயலவில்லை என்றாலும்
ஓர் நாள் உன்னை காண்பேன் என்ற
(அவ)நம்பிக்கையில்
நாட்களும் வருடங்களாய் நகர்கிறது.,
நித்தம் உன் நினைவுகள் இல்லை என்றாலும்
உன் அழுகுரல் கேட்ட நாள் மட்டும் .
"பெற்றவளாயிற்றே"