RANJEETHA - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : RANJEETHA |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 01-Mar-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 14 |
எண்ணங்கள் எல்லாம் வண்ணங்கள் ஆக வேண்டும் என்ற ஆசையோடு நித்தம் முயற்சிக்கிறேன் நிச்சயம் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் . (Love all ) Think Positive U Can .
கண்டதும் காதலில்
நம்பிக்கை இல்லை என்றிருந்தேன் ,
உன் கண்களில் விழும் வரை ..
நொடிகளில் விழ செய்தாய்
ஏனோ
இன்றும் எழ முடியாமல் ,
உருவம் இல்லா உன்னுடனான
என் முதல் காதல்
என்றும் உனக்காக ...
காதல் எனும் வில்லில்
என் மனம் எனும் அம்பை
ஏந்தி வைத்து
காத்துக் கொண்டிருக்கிறேன்..
உன் இதயத்தின் மேல் குறி
வைத்து அடிக்க போகிறேன்
அம்பால் அல்ல அன்பால்..
கண்னே,
நீ காயம் கொள்வாயா
இல்லை
என் மேல் காதல் கொள்வாயா ..!
உன் பதிலுக்காக என் காதலுடன்,
❤சேக் உதுமான் ❤
வாழ்க்கையை பற்றி விவரிக்க
வரிகள் தேடினேன் ,
வந்தது என்னவோ
கண்ணீர் துளிகளே !
அது ஆனந்தக்கண்ணீரா
அல்ல அழுகைகண்ணீரா
என்பது கேள்விக்குறியே ?????
என்றும் உணர்ந்தவர்களுக்கு
மட்டுமே உரித்தானது .
உன் அழுகுரல் கேட்டே
கண் விழித்தேன்
பாசத்துடன் பல் இளித்தார்கள்
பின்
பகையை மட்டுமே வளர்த்தார்கள் .
என்றும் உன்னை காண இயலவில்லை என்றாலும்
ஓர் நாள் உன்னை காண்பேன் என்ற
(அவ)நம்பிக்கையில்
நாட்களும் வருடங்களாய் நகர்கிறது.,
நித்தம் உன் நினைவுகள் இல்லை என்றாலும்
உன் அழுகுரல் கேட்ட நாள் மட்டும் .
"பெற்றவளாயிற்றே"
எண்ணங்கள் பல இருப்பின் நான் எதை பற்றி கூறுவது
காவியம் என்ற சொல்லில்
காவி இருக்கிறது !
ஆனால்
காவியம் எல்லாம்
காதலினால்தான் வாழ்கிறது !
காவி உடுத்திய முனிவர்களும்
எழுதியது காதல் காவியங்களே !
எழுத்து பிழை இருப்பின் ஏற்றுக்கொள்
எண்ணத்தில் பிழை இருப்பின்
என்னை மன்னித்துவிடு
நான் மாற்றிக்கொள்கிறேன்
"உனக்காக"
இதுவரை
பேசும் நொடிகள் கிடைத்ததில்லை
இருந்தும்
நீ பேசும் விதம் கண்டு
பேசி இருப்பதை போல்
என் மனம் மகிழ்கிறது
நித்தம் ஏங்குகிறேன்
ஒற்றை காதலியாய்!