எனக்கானவள்

எனக்கானவள்
அன்று…
நான் தந்தையை இழந்தபோது
துயரத்தை மனதில் கொண்டு
நானிருக்கிறேனென தைரியம் சொன்னவள் ..

அன்றிலிருந்து இன்றுவரை...
என் கனவுகளுக்காக ஓடிக்கொண்டிருப்பவள்...
என் விருப்பங்களை தவிர்க்காதவள்.
என் வலிகளைக்கண்டு துடித்தெழுபவள் ...

என்னை பட்டம் பெறுமளவிற்க்கு உயர்த்தினாய் ...
உன்னை கல்லூரிக்கு அழைத்தபோதெல்லாம்
வேலையிருக்கென்ற காரணம் சொன்னாய்..

அன்று…
நீ வேலை இருக்கிறது என
காரணம் சொன்னதால் தான்
இன்று உயர்ந்திருக்கிறேன் ..
தற்போது…
நான் பட்டம் பெறுவதை
காண அழைக்கிறேன்..
இப்போதும் வருவாயோ? ??

இல்லை..
மறுபடியும் வேலை என்று
காரணம் சொல்வாயோ???
ஏனெனில்...
நேற்று…
என் முதல் பட்டபடிப்புக்காக ஓடினாய்..
இன்று…
என் இரண்டாவது பட்டபடிப்புக்காக ஓடுகிறாய் ...
நாளை…
என் வாழ்க்கைக்காக ஓடுபவள் ஆயிற்றே நீ...!
நீ எவ்வளவு தூரம் ஓடினாலும்
நான் பெற்ற
பெறப்போகும் பட்டங்கள்
அனைத்தும் உனக்கானவை தான்
என் ஆருயிரே,...

எழுதியவர் : (6-Mar-18, 1:01 pm)
Tanglish : enakkaanaval
பார்வை : 266

மேலே