இலக்கியா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இலக்கியா |
இடம் | : ராஜமன்னார்குடி |
பிறந்த தேதி | : 22-Jun-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 159 |
புள்ளி | : 25 |
பஞ்சாய் மாறிய தலை...
பஞ்சு மிட்டாய் கலரில் சேலை...
வாழ்வதற்க்கு ஏதுமற்ற நிலை...
செய்வதறியாத பொழுதில்
இறைவா!- உன் காலடியே சரணம்
மங்கலமாய்
வாழ்வை தொடங்கி...
பெரிய குடும்பத்தின்
குரலுக்கு அடங்கி ...
கூப்பிட்ட கணவன்
குரலுக்கெல்லாம்-கூடி
பெற்று போட்ட
குழந்தைகள் ஆறு...
ஆணும் மூன்று...
பெண்ணும் மூன்று...
பேர் வைத்து பெரு வாழ்வு...
வாழ்ந்து நானும் முடித்தேன்...
வயதாகி போன கணவன்...
ஒரு நாளில் அடக்கமாயும் போனான்...
யார் வைத்து என்னை பார்ப்பது ?
சண்டையோ தினமும் நடந்தது...
ஆசையாய் வளர்த்த பிள்ளைகள்...
மனைவிக்கு அடங்கி தான் போனார்கள்.
பெண் மக்களோ வா வெனச் சொன்னாலும்
#அப்பா...
வேதனையில் தள்ளியது உன் நிகழ்வுதானப்பா...
உன்மேல் கொண்ட
நேசமும் பாசமும்
நம்பிருந்த குடும்பங்களும் -இன்று
அநாதையானதே ப்பா...
மாமா அழுதபோதும்
அண்ணன் அழுதபோதும்
தலைகோதி ஆறுதலளிக்க
ஆயிரம் பேர் இருந்தாலும்
உனக்கு ஈடாகுமா ப்பா?
உன் வெள்ளை வேட்டி சட்டைக்கும்
உன் வாகனத்துக்கும் - இருந்த
மதிப்புதான் மீண்டு
வருமா ப்பா?
என் திருமணத்தில் பொட்டிட்ட
உன் கை ஸ்பரிசம்- இனியெனக்கு
கிடைக்குமா ப்பா?
திருவிழா நேரங்களில்
வானத்தை நோக்கி
வேடிக்கை பார்க்க வைத்த - உன்
தொழிலைதான் மீண்டும்
காண முடியுமா ப்பா?
இந்த கால பொண்ணுங்க
இப்பல்லாம் இப்படிதான்னு
என்னையே சில நிமிடம் பார்த
பகலும் இரவும்- நீயாய்...
தென்றலாய் தீண்டுவதும் - நீயாய்...
உன்னுறவாய்...
உரிமையாய்-உன்னுடனே
நிழலாய் தொடரும்
பந்தமிதுதானோ...?
பிஞ்சுவின் பாதம்
தாய்மடி தங்கும்
வரம் எப்போதோ?
தாயவளும்
தந்தையவனும்
எதிர்நோக்கும்
நாள் எப்போதோ?
உச்சி முகர்ந்து
தொட்டுணரும்
நேரம் எப்போதோ?
உன் தலை வருடி
நெற்றி முத்தமிட்டு
மார்பணைத்து
எட்டி உதைக்கும்
கால்களை
தொட்டிலிட்டு கொஞ்சும்
என்னவனை
ரசிப்பது எப்போதோ?
#அப்பா...
வேதனையில் தள்ளியது உன் நிகழ்வுதானப்பா...
உன்மேல் கொண்ட
நேசமும் பாசமும்
நம்பிருந்த குடும்பங்களும் -இன்று
அநாதையானதே ப்பா...
மாமா அழுதபோதும்
அண்ணன் அழுதபோதும்
தலைகோதி ஆறுதலளிக்க
ஆயிரம் பேர் இருந்தாலும்
உனக்கு ஈடாகுமா ப்பா?
உன் வெள்ளை வேட்டி சட்டைக்கும்
உன் வாகனத்துக்கும் - இருந்த
மதிப்புதான் மீண்டு
வருமா ப்பா?
என் திருமணத்தில் பொட்டிட்ட
உன் கை ஸ்பரிசம்- இனியெனக்கு
கிடைக்குமா ப்பா?
திருவிழா நேரங்களில்
வானத்தை நோக்கி
வேடிக்கை பார்க்க வைத்த - உன்
தொழிலைதான் மீண்டும்
காண முடியுமா ப்பா?
இந்த கால பொண்ணுங்க
இப்பல்லாம் இப்படிதான்னு
என்னையே சில நிமிடம் பார்த
#அப்பா...
வேதனையில் தள்ளியது உன் நிகழ்வுதானப்பா...
உன்மேல் கொண்ட
நேசமும் பாசமும்
நம்பிருந்த குடும்பங்களும் -இன்று
அநாதையானதே ப்பா...
மாமா அழுதபோதும்
அண்ணன் அழுதபோதும்
தலைகோதி ஆறுதலளிக்க
ஆயிரம் பேர் இருந்தாலும்
உனக்கு ஈடாகுமா ப்பா?
உன் வெள்ளை வேட்டி சட்டைக்கும்
உன் வாகனத்துக்கும் - இருந்த
மதிப்புதான் மீண்டு
வருமா ப்பா?
என் திருமணத்தில் பொட்டிட்ட
உன் கை ஸ்பரிசம்- இனியெனக்கு
கிடைக்குமா ப்பா?
திருவிழா நேரங்களில்
வானத்தை நோக்கி
வேடிக்கை பார்க்க வைத்த - உன்
தொழிலைதான் மீண்டும்
காண முடியுமா ப்பா?
இந்த கால பொண்ணுங்க
இப்பல்லாம் இப்படிதான்னு
என்னையே சில நிமிடம் பார்த
உன்னை பார்த்த போதே
காதலிக்க தொடங்கியவள் நான்…
உன் சினுங்கல்களை கண்டு
ரசித்தவள் நான்...
உன் உருவம் கண்டு
உணர்ந்தவள் நான்…
நான் தொடும் பரிசத்திற்காகவே
காத்திருப்பாய்-நீ
தினமும் ஒருமுறையாவது
காதோரம் முத்தமிடுவாய்…
உன்னிடம் தினம் பேசவில்லை
என கோபிப்பாய்…
நீ பேசாத நேரங்களில்
நான் அமைதியாவேன்..
காரணம் நானென
கவி சொல்வாய்…
மொத்தத்தில்
என்னுயிர் மூச்சாகி போனாய்…
என் மூச்சு நிற்கும் தருணம்
நீயெப்படிருப்பாயென தெரியாது ...
நீயிருக்கும் போதே
உன்னுடன் பேசிக்கொள்கிறேன்…
உன்னுடன் சண்டையிட்டுக் கொள்கிறேன்…
சில நாட்கள் நீ
என் வாழ்வில் இல்லாமலும் போகலாம்…
நீயில்லா ந
எனக்கானவள்
அன்று…
நான் தந்தையை இழந்தபோது
துயரத்தை மனதில் கொண்டு
நானிருக்கிறேனென தைரியம் சொன்னவள் ..
அன்றிலிருந்து இன்றுவரை...
என் கனவுகளுக்காக ஓடிக்கொண்டிருப்பவள்...
என் விருப்பங்களை தவிர்க்காதவள்.
என் வலிகளைக்கண்டு துடித்தெழுபவள் ...
என்னை பட்டம் பெறுமளவிற்க்கு உயர்த்தினாய் ...
உன்னை கல்லூரிக்கு அழைத்தபோதெல்லாம்
வேலையிருக்கென்ற காரணம் சொன்னாய்..
அன்று…
நீ வேலை இருக்கிறது என
காரணம் சொன்னதால் தான்
இன்று உயர்ந்திருக்கிறேன் ..
தற்போது…
நான் பட்டம் பெறுவதை
காண அழைக்கிறேன்..
இப்போதும் வருவாயோ? ??
இல்லை..
மறுபடியும் வேலை என்று
காரணம் சொல்வாயோ???
ஏனெனில்...
ஏ!
சுனாமியே...
எமனிடம் எவ்வளவு வாங்கினாய்-இப்படி
லட்சக்கணக்கில் உயிர்களை பழிவாங்கிட...
ஈன்றெடுக்காத தாய் தந்தையரையும்...
உயிராய் நினைக்கும் அன்புக்குழந்தைகளையும்...
கடலே...!!!
உன் கோரப்பசிக்கு உணவாக்கிவிட்டாயே...!!!
அலையாய் வந்து எங்களை அலைய விட்டாயே...!!!
குடியிருந்த குடிசையையும் அடித்து சென்றுவிட்டாயே...
உன்னால் ஏற்பட்ட மரணங்கள் என்றுமே மறக்க முடியாதவை...
இனிமையான ஒவ்வொரு பயணமும்
நன்றாகவே ஆரம்பமாகும்…
முடிவும் நன்மையாகவே முடியும்
என்ற நம்பிக்கையில்...
சாலைகளில் கண்டேன்-உன்
உயிரற்ற உடைந்த பாகங்களை…
உன்னை தாண்டியப்பின் கண்டேன்-நீ
அவசரமாய் நிறுத்திய
வண்டியின் அச்சுக்களை…
அவைகள் சொல்கின்றன-உன்
கண்ணீர் கதையை…
நீ யாரென்றே தெரியாதே-எனக்கே
என்னுயிர் சிதறி போனதே…
உன்னை நினைத்து காத்திருந்த…
பல உறவுகளின் கதறல்களுக்கு…
என்ன சொல்ல போகிறாய்…
உன்னை போன்ற பல உயிரற்ற
உடலை மாதம் ஒருமுறை
சுமந்து கொண்டுதான் இருக்கின்றன…
தஞ்சைவழி மன்னை சாலைகள்
உறவுகளிடம் நினைவுகளாக…
சாலையை கடப்போரின் கண்ணீராக…