விபத்தும் நானும் …
இனிமையான ஒவ்வொரு பயணமும்
நன்றாகவே ஆரம்பமாகும்…
முடிவும் நன்மையாகவே முடியும்
என்ற நம்பிக்கையில்...
சாலைகளில் கண்டேன்-உன்
உயிரற்ற உடைந்த பாகங்களை…
உன்னை தாண்டியப்பின் கண்டேன்-நீ
அவசரமாய் நிறுத்திய
வண்டியின் அச்சுக்களை…
அவைகள் சொல்கின்றன-உன்
கண்ணீர் கதையை…
நீ யாரென்றே தெரியாதே-எனக்கே
என்னுயிர் சிதறி போனதே…
உன்னை நினைத்து காத்திருந்த…
பல உறவுகளின் கதறல்களுக்கு…
என்ன சொல்ல போகிறாய்…
உன்னை போன்ற பல உயிரற்ற
உடலை மாதம் ஒருமுறை
சுமந்து கொண்டுதான் இருக்கின்றன…
தஞ்சைவழி மன்னை சாலைகள்
உறவுகளிடம் நினைவுகளாக…
சாலையை கடப்போரின் கண்ணீராக…