பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

பஞ்சாய் மாறிய தலை...
பஞ்சு மிட்டாய் கலரில் சேலை...
வாழ்வதற்க்கு ஏதுமற்ற நிலை...
செய்வதறியாத பொழுதில்
இறைவா!- உன் காலடியே சரணம்

மங்கலமாய்
வாழ்வை தொடங்கி...
பெரிய குடும்பத்தின்
குரலுக்கு அடங்கி ...
கூப்பிட்ட கணவன்
குரலுக்கெல்லாம்-கூடி
பெற்று போட்ட
குழந்தைகள் ஆறு...

ஆணும் மூன்று...
பெண்ணும் மூன்று...
பேர் வைத்து பெரு வாழ்வு...
வாழ்ந்து நானும் முடித்தேன்...

வயதாகி போன கணவன்...
ஒரு நாளில் அடக்கமாயும் போனான்...
யார் வைத்து என்னை பார்ப்பது ?
சண்டையோ தினமும் நடந்தது...

ஆசையாய் வளர்த்த பிள்ளைகள்...
மனைவிக்கு அடங்கி தான் போனார்கள்.

பெண் மக்களோ வா வெனச் சொன்னாலும்
மனம் ஒப்பத்தான் இல்லையே...
என்ன செய்தும் என்னை கொல்ல என்னாலும் முடியவில்லையே...

வாழ்ந்த போதெல்லாம்
இறைவனை ஓரளவே நினைத்து வாழ்ந்ததனால்
முழு நேரம் நினைத்தபடி
வாழ்ந்து முடிக்க முடிவெடுத்தேன்...

பஞ்சையாய்... பராரிகளாய்...
அலைந்து திரியும்
முடியா கூட்டத்தின் நடுவே
நானும் வந்து கலந்தேன்...
இறைவனை மனமுருகி
வேண்டி நித்தமும்
தியானம் புரிந்தேன்...

இனி என்ன ?
பெற்ற பிள்ளைகள்
பேறு பெற்ற வாழ்வு வாழனும்-அதையே
இறைவன் தலத்திலே
வேண்டுதலாய் வேண்டனும்...

என் பிள்ளைகளுக்கு
இதுபோலே நிலை
வேண்டாமே இறைவா.!!!

யாருக்குமே வேண்டாம்...
என் நிலை...
யாருமற்ற நிலை...

எழுதியவர் : இலக்கியா (29-May-19, 12:12 pm)
பார்வை : 50

மேலே