ரவிராமன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரவிராமன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-May-2019 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 0 |
சொல்லிக்கற மாதிரி ஏதுமில்லை
எல்லோரையும் நம்புபவன் ஏமாற்றம் வந்தால் தாங்குபவன்
#அப்பா...
வேதனையில் தள்ளியது உன் நிகழ்வுதானப்பா...
உன்மேல் கொண்ட
நேசமும் பாசமும்
நம்பிருந்த குடும்பங்களும் -இன்று
அநாதையானதே ப்பா...
மாமா அழுதபோதும்
அண்ணன் அழுதபோதும்
தலைகோதி ஆறுதலளிக்க
ஆயிரம் பேர் இருந்தாலும்
உனக்கு ஈடாகுமா ப்பா?
உன் வெள்ளை வேட்டி சட்டைக்கும்
உன் வாகனத்துக்கும் - இருந்த
மதிப்புதான் மீண்டு
வருமா ப்பா?
என் திருமணத்தில் பொட்டிட்ட
உன் கை ஸ்பரிசம்- இனியெனக்கு
கிடைக்குமா ப்பா?
திருவிழா நேரங்களில்
வானத்தை நோக்கி
வேடிக்கை பார்க்க வைத்த - உன்
தொழிலைதான் மீண்டும்
காண முடியுமா ப்பா?
இந்த கால பொண்ணுங்க
இப்பல்லாம் இப்படிதான்னு
என்னையே சில நிமிடம் பார்த
பகலும் இரவும்- நீயாய்...
தென்றலாய் தீண்டுவதும் - நீயாய்...
உன்னுறவாய்...
உரிமையாய்-உன்னுடனே
நிழலாய் தொடரும்
பந்தமிதுதானோ...?
பிஞ்சுவின் பாதம்
தாய்மடி தங்கும்
வரம் எப்போதோ?
தாயவளும்
தந்தையவனும்
எதிர்நோக்கும்
நாள் எப்போதோ?
உச்சி முகர்ந்து
தொட்டுணரும்
நேரம் எப்போதோ?
உன் தலை வருடி
நெற்றி முத்தமிட்டு
மார்பணைத்து
எட்டி உதைக்கும்
கால்களை
தொட்டிலிட்டு கொஞ்சும்
என்னவனை
ரசிப்பது எப்போதோ?
அமாவாசையாம்
அம்மா சொன்னார்…
சொல்லியதுமே……
எனக்கோ என் அப்பாவோடு அமர்ந்து
அப்பளம் கடித்த நினைவுகள்…
கடிக்க அப்பளமிருக்கு…
கூட அமர நீயில்லையே ப்பாஆ…
எங்கே சென்றாலும் வீடுவந்து ஊட்டிவிடும்
உன் பாசத்திற்கு ஈடாகுமா?
இன்றைய நாள்…
தலை தேய்த்து குளிக்க வைக்கும்
அமாவாசைக்கு ஈடாகுமா இன்றைய அமாவாசை…
உன் நினைவுகளிலே பல
அமாவாசை கடந்து விட்டேன்…
தாத்தாவிற்காக பாட்டி விரதமிருக்க…
உனக்காக அம்மா விரதமிருக்க…
வேடிக்கையாய் பார்க்கிறேன் விரத தினங்களை…