அமாவாசை

அமாவாசையாம்
அம்மா சொன்னார்…
சொல்லியதுமே……
எனக்கோ என் அப்பாவோடு அமர்ந்து
அப்பளம் கடித்த நினைவுகள்…
கடிக்க அப்பளமிருக்கு…
கூட அமர நீயில்லையே ப்பாஆ…
எங்கே சென்றாலும் வீடுவந்து ஊட்டிவிடும்
உன் பாசத்திற்கு ஈடாகுமா?
இன்றைய நாள்…
தலை தேய்த்து குளிக்க வைக்கும்
அமாவாசைக்கு ஈடாகுமா இன்றைய அமாவாசை…
உன் நினைவுகளிலே பல
அமாவாசை கடந்து விட்டேன்…
தாத்தாவிற்காக பாட்டி விரதமிருக்க…
உனக்காக அம்மா விரதமிருக்க…
வேடிக்கையாய் பார்க்கிறேன் விரத தினங்களை…