ஒப்பாரிப் பாடல்

ஆரிரரோ..
போய்வா என் கண்மணியே!

தூளிக் கட்டி
தூங்க வச்சு..
தாலாட்டும் நிதம்
படிச்சேன்..
சீராட்டி உன்ன வழத்தேன்!
சீக்கிரம் வா கண்மணியே!

உயிரோடு நான்
உறைய..
நான் கண்ட
காட்சி அது..
பினவறையில் ஆயிரமாம்,
தொருவெங்கும்
சிரு விரலாய்,
மாண்டது யார் என்று
அறியாமல் தேடுகிறோம்,
சதை கொண்ட
வெறும் உடலாய்..
தினம் தோறும் விடுகிறோம்!

தாளலையே என் மனம் தான்!
அய்யோ!
தாளலையே என் மனம் தான்!

போய்வா.. என் ரத்தினமே!
போய்வா.. என் முத்தினமே!
ஆராரோ ஆரிரரோ..

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (27-Feb-18, 2:22 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 950

மேலே