மாலதி ரவிசங்கர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மாலதி ரவிசங்கர் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 1285 |
புள்ளி | : 110 |
பரம்பொருள் என்றோம்,
அவ்வடிவின் நிழல்
அவள் உருவென்றோம்..
மெய்பொருள் என்றோம்,
அம்மெய்யின் ஒலி
அவள் மொழயென்றோம்!
உன் ஊனில்
உயிர் ஊற்றி,
உயிர்பித்தவளுக்கு
உருவமானாய் - நீ.
வாழும் தேவதை என்பார்,
வணங்கும் தெய்வம் என்பார்..
அம்மா!
நீ உவமையற்றவள்,
என் உணர்வில் நிறைந்தவள்!
அம்மா! அவளே என் முகவரி..
நம் பயணத்தின் முதல் வரி!
மடி ஒன்றில் என்னை
அன்பால் ஏந்தினாய்..
மாதங்கள் பல என்னை
நீரில் தாங்கினாய்..
வலி வர ஏனோ
வேண்டினாய்?
உன் அழுகையில்
நான் மலர்ந்தேனே!
பின்..
என் அழுகையில்
நீ மலர்ந்தாயே!
தெய்வம் தொட்டு வணங்காத
பாதங்கள் உனதல்லவா!
அய்யன் வீட்டு குலசாமியின்
காட்
அப்பா!
என் ஆதியானவன்..
என்னை விதையிட்டு
பத்திரமாய் தன் உயிரினில்
சுமந்தவன்!
கரம் பிடித்த காரணம்
அறியாமல்..
அடம் பிடித்து தூரம்
தொலைந்தாலும்..
தன் விழிகளில்
காத்தருள்வான்!
ஒரு கண்ணில் கோபம் வந்தாலும்..
மறு கண்ணில் ஈரம் நின்றாலும்..
ஓர் புன்னகையால்,
என்னை அள்ளி
அணைப்பான்!
தடுமாறும் போதெல்லாம்,
தாங்கிக் கொள்ள வருவாயே..
தடம் மாறும் போதெல்லாம்,
ஏந்திக் கொண்டு நிற்பாயே..
உன் உயிரை
தின்று நான் வாழ்கிறேன்!
தன் ஆறடி உயரத்தில்,
ஓர் அங்குலமாய்..
என்னை இதயத்தில்
பெட்டகமாக்கியவன்..
என் வாழ்வதன் தூரத்தில்
உன் நிழலேன
நான் பின் தொடர்வேனே!
நான் எழுதிய முதல்
நீளமான கவிதை
உன் பெயர் தான்..
என் சிறிய இதழ்கள்
மொழிந்த உயர்ந்த
வேதம் உன் பெயர் தான்..
அதை என்றும்
நான் மட்டும்
முன்மொழிய
என் ஆவல்!
மெய்உரு நான் காண
ஆடி ஒன்று வேண்டாமா?
ஆடித் திங்களில்,
அத்திங்களின் ஒலியில்
உன் அம்சம் தான்
தென்படுமா?
*ஆடி - கண்ணாடி, மாதம்
திங்கள் - மாதம், நிலா
மெய்உரு - image
நீ வெறுக்கும்
ஒவ்வொரு தருணங்களிலும்,
என் தன்மானத்தை
அடகுவைக்கிறேன்!
ஏனென்றால்..
நீ மீண்டும்
நேசிக்க விரும்பினால்,
உனதருகில் நான்
இருக்க ஆசைப்படுகிறேன்!
ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி..
மாவை ஆட்டி வைக்கனும்,
துணிகளை துவைத்து, காயவைத்து, இஸ்திரி போடனும்,
பையன் பள்ளி உணவு பையை கழுவனும்,
அவன் பள்ளி ஷூவை துடைத்து வைக்கனும்,
மளிகை சாமான்களை அலமாரியில் அடுக்கனும்,
காய்கறி சந்தை சென்று ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கனும்,
மாலை தன் குடியிருப்பில் உள்ள தோழியின் மகள் பிறந்தநாள் விழாவிற்கு தயாராகனும்..
என்று அவள் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது...
அதிகாலை 5 மணிக்கு எழுந்திருந்தால் அனைத்தையும் செம்மையாகவும் இலகுவாகவும் செய்திருக்கலாம்.
ஆனால்..
தன் நான்கு வயது மகன், தான் எழுந்தால் அவனும் உடன் எழுந்து வந்துவிடுவான் என்ற என்னத்தில் அவள்,
உதாசீன படுத்தும்
உறவுகளை உதறிவிடுங்கள்,
வெம்பி அழுதாலும்
வேதனைதான் மிஞ்சும்..
உரிமையுடன் பழகும்
உறவுகளை அங்கிகரியுங்கள்,
அவர்களின் நிகழ்வுகளிலும்
நினைவுகளிலும் நிறைந்திருப்பிர்கள்!
ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி..
மாவை ஆட்டி வைக்கனும்,
துணிகளை துவைத்து, காயவைத்து, இஸ்திரி போடனும்,
பையன் பள்ளி உணவு பையை கழுவனும்,
அவன் பள்ளி ஷூவை துடைத்து வைக்கனும்,
மளிகை சாமான்களை அலமாரியில் அடுக்கனும்,
காய்கறி சந்தை சென்று ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கனும்,
மாலை தன் குடியிருப்பில் உள்ள தோழியின் மகள் பிறந்தநாள் விழாவிற்கு தயாராகனும்..
என்று அவள் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது...
அதிகாலை 5 மணிக்கு எழுந்திருந்தால் அனைத்தையும் செம்மையாகவும் இலகுவாகவும் செய்திருக்கலாம்.
ஆனால்..
தன் நான்கு வயது மகன், தான் எழுந்தால் அவனும் உடன் எழுந்து வந்துவிடுவான் என்ற என்னத்தில் அவள்,
உறவுக்காக உரிமை போராட்டம்
செய்து வாழ்வில் தோற்றுப்
போவதை காட்டிலும்..
உங்கள் உணர்வுகளை மதித்து
அவர்களை தூசாக நினைத்து
துடைத்து விட்டு வாழ்வை
சுமுகமாக நகர்த்த
கற்றுக் கொள்ளுங்கள்!
ஓர் கடி..ஓர் அடி..
அற்புதங்களும் அதிசயங்களும்
நிகழ்த்திட தேவ தூதன் தேவையில்லை..
ஒரு கொசு கடி போதும்...
சப்பபா...
என்ன ஒரு பூ(அ)ரிப்பு..
என்ன ஒரு புல்ல(அ)ரிப்பு!
கானல் நீரில்
காகித கப்பல்
கரை காண
காத்திருக்கிறது!
போகும் திசை எங்கும்
உன் குரலாக..
உன் குரல்
ஒளிக்கும் திசை எல்லாம்,
பேரழகின் பிம்பங்களாய்!
ஏனோ,
அழைப்பு மணி ஓசை
கேட்டாள் மட்டும்,
நீ புதையுண்ட
மண்ணில்..
என் நினைவுகள் துடிக்குதடி!